sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/யுடியூப் இணையதளம் சற்றுநேரம் முடங்கியது; பயனர்கள் அவதி

யுடியூப் இணையதளம் சற்றுநேரம் முடங்கியது; பயனர்கள் அவதி

யுடியூப் இணையதளம் சற்றுநேரம் முடங்கியது; பயனர்கள் அவதி


ADDED : பிப் 18, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 08:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்


யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

யுடியூப் கூகுளுக்குச் சொந்தமான ஒரு பிரபலமான அமெரிக்க ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளம். இந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். இந்த தளத்தில், பயனர்கள் இலவசமாக வீடியோக்களைப் பார்க்கவும், பகிரவும், லைக் செய்யவும், கருத்து தெரிவிக்கவும் மற்றும் சொந்தமாக வீடியோ பதிவேற்றவும் முடியும்.

வீடியோ பதிவேற்றுபவர்களுக்கு, எவ்வளவு பேர் பார்த்து இருக்கின்றனர் என்பது அடிப்படையில் வருமானம் கிடைக்கும். எனவே வீடியோ பதிவிடுவதை ஏராளமானோர் தொழிலாக கொண்டு உள்ளனர். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் வீடியோக்கள் பார்க்க முடியாமல் தவித்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக யுடியூப் இணையதளத்தின் முகப்பு பக்கம் செயல்படாமல் முடங்கியது. இந்திய நேரப்படி காலை 6:29 மணி முதல், யுடியூப் சமூக ஊடக தளத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக 2,40,707 பேர் புகார் அளித்து இருந்தனர். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்தது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us