ADDED : பிப் 22, 2024 06:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின் படி காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அமைப்பு , மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய கம்பெனிகள் படைப்பிரிவு போலீசார் கார்கேவுக்கு பாதுகாப்பு வழங்குவர்.