இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து ஜாகிர் கான் நீக்கம்
இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து ஜாகிர் கான் நீக்கம்
ADDED : ஆக 07, 2011 02:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், முதல் டெஸ்டின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானின் காயம் முழுமையாக குணமாகாததால், அவர் தொடர் முழுவதிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அவரது காலில் ஆபரேஷன் செய்ய வேண்டியிருப்பதால், 14 முதல் 15 வாரம் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.