தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ பூஜ்ய சகிப்புத்தன்மை!

பூஜ்ய சகிப்புத்தன்மை!

பூஜ்ய சகிப்புத்தன்மை!


ADDED : பிப் 05, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையால், நக்சல் வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளன. வரும் மார்ச்சுக்குள் நாட்டில் இருந்து நக்சலிசம் வேரோடு பிடுங்கி எறியப்படும். ஓட்டு வங்கி அரசியலுக்காக முந்தைய அரசுகள் தேச விரோத சக்திகளுடன் சமரசம் செய்ததால், வன்முறை அதிகரித்தது.

நித்யானந்த் ராய் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

மத்திய அரசுக்கு பயம்!


ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தை பார்த்து மத்திய பா.ஜ., அரசு பயப்படுகிறது. இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சபையில் பேச அனுமதி மறுக்கிறது. என்ன நடந்தாலும், சீனா விவகாரத்தில் உண்மை வெளியே வரும். உண்மையை யாராலும் தடுக்க முடியாது.

பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,

ஒருமித்த கருத்து!


தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து பேசி ஒருங்கிணைந்து முடிவு எடுக்கும். இதுகுறித்து திரிணமுல் காங்., எங்களிடம் பேசி உள்ளது. விரைவில் மற்ற கட்சிகளும் பேசி ஒருமித்த கருத்து எட்டுவோம்.

கே.சி.வேணுகோபால் லோக்சபா எம்.பி., - காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us