/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சவுதி அரேபியாவில் அமையும் மகளிர் பல்கலைக்கழகம்
/
சவுதி அரேபியாவில் அமையும் மகளிர் பல்கலைக்கழகம்
நவ 07, 2008 12:00 AM
நவ 07, 2008 12:00 AM
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இதற்கான அடிக்கல்லை விரைவில் நாட்டவுள்ளார்.
ரியாத்தில் இப்பல்கலைக்கழகம் 2010ல் கட்டி முடிக்கப்படும்போது உலகின் மிகப்பெரிய உயர் படிப்புக்கான கல்வி நிறுவனமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்பல்கலைக்கழகம் சவுதியின் தலைநகருக்கருகில் சுமார் 80 லட்சம் ச.அடி பரப்பில் அமையவுள்ளது. இதன் கீழ் 13 கல்லூரிகள் இயங்கவுள்ளன.
இப்பல்லைக்கழகம் தொடர்பான உயர்மட்ட அறிவுரை கிடைத்தவுடன். வெளிநாட்டு இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் பலவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உலகத்தரம் வாய்ந்ததும், 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கக்கூடியதுமான பல்கலைக்கழகத்தை துவங்க பூர்வாங்கப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சிறப்பு கல்வி வளாகங்களில் இது மிகப் பெரியதாக இருக்கும் என்று சவுதி அரேபியாவின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த இரு ஆண்டுகளில் இது முழுமையாகச் செயல்படத் துவங்கிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழக கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், இயற்கை வைத்தியமுறை, மருந்தியல் துறை போன்ற படிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.
வளைகுடாப் பகுதியில் உள்ள பெண்களுக்கான புதிய யுகம் உருவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதனை உலகின் பிரசித்த பெற்ற கல்வி நிறுவனமாக மாற்றுவதுடன், ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
பல்கலைக்கழகங்களுடன் உடன்பாடுகளும் எட்டப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகம் தொடர்பான ஆலோசனைகளை சவுதி அரேபியாவின் லேபர், தொழில், வணிகம், பொருளாதாரம், திட்டம் போன்ற அமைச்சரவைகளுடன் நடத்திடும் முயற்சியும் முடுக்கி விடப்படுகின்றன.

