/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாட்டுப் பல்கலை.,வரமா? சாபமா?
/
வெளிநாட்டுப் பல்கலை.,வரமா? சாபமா?
நவ 15, 2008 12:00 AM
நவ 15, 2008 12:00 AM
குறிப்பாக இம்முயற்சிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான ராகுல் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த முயற்சியை இடது
சாரிக்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
கல்வியாளர்களின் மத்தியிலும் இம்முயற்சிதொடர் பான மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் இம்முயற்சி கல்வித்துறையில் ஏகபோக முறையை முடிவுக்கு வரும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் இம்முயற்சி கல்வித்துறையில் உண்மையான திறமை பெற்றவர்களை ஊக்குவிக்கும் என்றும் சில கொள்கைகளின் அடிப்படையில் கல்வித்துறையை முடமாக்கும் முயற்சிகள் முடிவடையும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
உலகின் புகழ்பெற்ற ஹென்றி போர்டின் தத்துவமாகிய வெளியிடு அல்லது அழிந்துபோ என்ற தத்துவப்படி, இம்முயற்சி காரணமாக கல்வித்துறையில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால், தொடர்ந்து அறிவு வளர்ச்சி மற்றும் அறிவு முன்னேற்றம் ஏற்படும் என்றும் கல்வியாளர்களின் திறன் மேம்பாடுக்கு இம்முயற்சி பேருதவி புரியும் என்றும் கல்வியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை தனியாக அனுமதிப்பதை விடுத்து, இந்தியப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட வைப்பதே சரியான முறையாக இருக்கும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சந்தையை மையமாகக் கொண்டு இயங்குவதில் பிரசித்தி பெற்றதுடன் அவற்றுக்கு நல்ல
பிராண்ட் இமேஜும் உள்ளது. எனவே இவற்றின் வருகையால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் நலிந்துவிடும் நிலை உள்ளது. எனவே இவற்றை கூட்டுப்படிப்புக்காக மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
சமூக, பொருளாதார, ஜாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி உருவாகி வரும் இந்தப் புதிய வர்க்கத்திற்கு இம்முயற்சி கட்டாயம் தேவை என்று இவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சிறந்த கல்வி என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதாக இருக்காது என்பதோடு, இம்முயற்சிகள் கல்வி ரீதியாக மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிந்துவிடும் அபாயம் இருப்பதாக மற்றொரு கல்வியாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பல்கலைக்கழக்ஙகளின் கட்டண விகிதங்கள் சராசரி மனிதனின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் மட்டுமே இந்தப் படிப்புகளை எட்டமுடியும் என்றும் இவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு இடையேயும் இது தொடர்பான முரண் பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை படிப்பில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்; அதே நேரம் பேதங்களையும் ஏற்படுத்தும் என்று இவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இவை வர்க்க பேதங்களை உருவாக்காது என்றும் கல்வித்துறையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதுடன் கல்வித்துறையில் புதிய யுகம் தொடங்கக்காத்திருக்கிறது என்றும் ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.
நன்கு போட்டியிடும் திறமைபெற்ற மாணவர்கள் இதன்மூலம் தங்கள் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளமுடியும் என்றும், அதிகபட்ச கட்டண விகிதங்களை எதிர்கொள்ள ஸ்காலர்ஷிப்களும் கல்விக்கடன்களும் வழங்கப்படும் என்று அரசுத்தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது வரமாக அமையுமா, சாபமாக அமையுமா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

