/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பாசிடிவ் எண்ணமே இன்றையத் தேவை
/
பாசிடிவ் எண்ணமே இன்றையத் தேவை
பிப் 07, 2009 12:00 AM
பிப் 07, 2009 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இதற்கு பாசிடிவ் ஆட்டிடியூட் எனப்படும் நம்பிக்கை மனப்பான்மை மிகவும் தேவை. பாசிடிவான மனப்பான்மை கொண்டவர் என்று ஒருவரை எப்போது சொல்லலாம்? சவால்களை தயக்கமின்றி சந்திப்பவராகவும் நம்பிக்கையோடு எதையும் அணுகுபவராகவும் ஒருவர் இருந்தால் அவரை பாசிடிவ் மனிதர் என்று கூறலாம்.
யார் ஒருவர் பாசிடிவான நபராக விளங்குகிறாரோ அவரையே எந்த நிறுவனமும் பணியில் அமர்த்த விரும்புகிறது
. தனது இலக்கை அடைவதற்காக பாசிடிவ் நபரானவர் எந்த முயற்சியையும் எடுக்க தயக்கம் காட்ட மாட்டார். அவரைப் போன்றவர்கள் தான் இலக்கை எட்டுவதில் அதிக வெற்றி பெறுபவராக இருப்பதை நாம் தினசரி வாழ்வில் காணலாம். பாசிடிவ் ஆட்டிடியூட் இருப்பவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதையும் நாம் காணலாம். இதனால் அவரது வாழ்க்கை நேர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் அமைகிறது.பாசிடிவ் நபரானவர் ஓவர் கான்பிடண்ஸ் என்னும் அதீத நம்பிக்கையுடையவர் அல்ல
. தான் பணியாற்றும் குழுவோடு இயைந்து தனது பணித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் ஆர்வமுடையவர் அவர். பாசிடிவான எண்ணம் இல்லாத நபரோ தனது குழுவை நம்பாதவராகவும் குழுவின் சிறப்பான செயல்பாட்டை எப்போதுமே பாராட்டும் எண்ணமில்லாதவராகவும் இருப்பதையும் நாம் பார்க்கலாம்.இது போன்ற நெகடிவ் ஆசாமிகளை நிர்வகிக்கும் நபர் எப்படி இருக்க வேண்டும்
? நெகடிவ் ஆசாமிகளின் ஆற்றலில் நம்பிக்கையிருப்பவராக தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த இடங்களிலெல்லாம் தனது குழுவினரின் செயல்பாடு பின்தங்கியிருப்பதாக அறிகிறோமோ அங்கெல்லாம் தனது செயல்திறனைக் கொண்டு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். தனது குழுவினரின் சிறப்பான செயல்பாடுகளை அங்கங்கே பாராட்டுவதும் அவசியம். சவால்களை குழுவினருக்குக் கொடுத்து அதை சமாளிப்பதில் தனது பங்கையும் உறுதி செய்ய வேண்டும்.தனிப்பட்ட முறையில் தனது திறனை மட்டுமே பெரிதாக மதிக்கும் நபர்களும் நிறுவனத்திற்கு பெரிய பயனளிக்க மாட்டார்கள்
. தான் என்ற சிந்தனையிலிருந்து இவர்களை வெளியே கொண்டு வந்து நாம் என்ற மனப்பான்மையை இவர்கள் பெறும் வண்ணம் குழுத் தலைவர் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்பவரைத் தான் எந்த நிறுவனமும் மதிக்கிறது என்பதை அனைவருமே மனதில் கொள்ள வேண்டும். தனது குறைபாடுகளை மட்டுமே யோசித்து வாழா இருப்பதை விட ஆக்கபூர்வமான செயல்களை இனிமேலாவது தொடங்குவது மிக அவசியம்.