தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரிசர்ச் அண்டு அனாலிடிக்ஸ்

ரிசர்ச் அண்டு அனாலிடிக்ஸ்

ரிசர்ச் அண்டு அனாலிடிக்ஸ்


அக் 16, 2009 12:00 AM

அக் 16, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 16, 2009 12:00 AM அக் 16, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிற நிறுவனங்களை முந்திச்செல்ல வேண்டியிருப்பதால் புதிய பொருட்களை அறிமுகம் செய்வது, விலையை தீர்மானிப்பது, போட்டியாளர்களை கணிப்பது, விளம்பரம் போன்றவை குறித்து தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் கவனமாக திட்டமிட வேண்டிய சூழல் உள்ளது.
இந்த துறைக்கென பிரத்யேகமாக போஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் இன் ரிசர்ச் அண்டு அனாலிடிக்ஸ் என்ற படிப்பை ஆமதாபாத் முத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் வழங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் டில்லி மையத்தில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
தகவல் பகுப்பாய்வு கருவிகளின் உதவியுடன் நுணுக்கமான திட்டமிட்டு முடிவெடுக்க இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. மார்க்கெட் ரிசர்ச் அண்டு அனாலிடிக்ஸ் பிரிவில் சாதிக்க விரும்பும் நிபுணர்கள், பட்டதாரிகள், பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கென பிரத்யேகமாக இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஓராண்டு படிப்பு. ஹியூ நெட்ஸ் குளோபல் எஜூகேஷன் மையத்தின் உதவியுடன் வீடியோ கான்பிரன்சிங் வடிவில் வழங்கப்படுகிறது. இதனால் பிற முழுநேரம் மற்றும் தங்கி படிக்கும் படிப்புகளை போல அல்லாது மாணவர்கள் விரும்பிய நேரத்தில் வந்து படிக்க முடியும்.
ஆய்வு மற்றும் தகவல் பகுப்பாய்வு பிரிவுகளில் உள்ள அனுபவம், இளநிலை, முதுநிலை படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 முடித்து இந்த துறையில் பணிபுரிபவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இந்த படிப்புக்கான கட்டணம் 80 ஆயிரம் ரூபாய். இந்த படிப்பு தொடர்பான
விபரங்களை www.micaindia.net என்ற வெப்சைட்டிலும் பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us