தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அரசியலை வெறுக்கும் மாணவர்கள்

அரசியலை வெறுக்கும் மாணவர்கள்

அரசியலை வெறுக்கும் மாணவர்கள்


நவ 05, 2009 12:00 AM

நவ 05, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 05, 2009 12:00 AM நவ 05, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் மனதில் பதிந்திருக்கும் உதாரண புருஷர்களை அடையாளம் காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதில் கிடைத்த முடிவுகள் பெரும்
பாலான மாணவர்களின் மனதில் இடம் பிடிக்க அரசியல்வாதிகள் தவறிவிட்டனர் என்றே மாணவர்கள் பலரும் கருதுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்திய இளைய தலைமுறையின் மனதில் மகாத்மா காந்திக்கும் ஜவகர்லால் நேருவுக்கும் தேசிய ஹீரோ அந்தஸ்து கிடைத்திருந்தது உண்மைதான். ஆனால் தற்போதைய அரசியல்வாதி யாருமே மாணவர்களுக்கு ஹீரோவாகத் தோன்றவில்லை என்று ஆய்வு கூறியுள்ளது. ஆய்வில் கலந்து கொண்ட மொத்த மாணவர்களில் 13 சதவீதம் பேருக்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் கடந்த காலத்தைய அரசியல்வாதிகளின் மீது ஆச்சரியமூட்டும் வகையில் அபிமானமும் பற்றும் உள்ளது. கடந்த காலத்தைய தலைவர்கள் கொண்டிருந்த உயர்ந்த கொள்கைகளின் காரணமாகவே அவர்களிடம் மாணவர்கள் அதிக மதிப்பைக் கொண்டிருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
30 சதவீத மாணவர்கள் அவர்களின் பெற்றோரையே உதாரணமாகக் கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. பெற்றோரின் பேச்சை மாணவர்கள் கேட்பதே இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு நிலவினாலும் பெற்றோரின் குணங்
களைப் பொறுத்தே அவர்களின் நடத்தையும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அதற்கேற்ற குணங்களை பெற்றோரும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
13 சதவீத மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களே தங்களுக்கு உதாரணமான மனிதர்களாகக் கருதுகின்றனர். இதனால் மாணவர்களை உளவியல் ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு அதிகம் பொறுப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பெரும் வியாபார விற்பன்னர்களையும் விஞ்ஞானிகளையும் தொழில் சார்ந்த உதாரணங்களாக
மாணவர்கள் பார்க்கின்றனர்.
தங்களுக்குத் தேவைப்படும் உந்து சக்தியை இவர்களிடமிருந்தே பெறுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். விளையாட்டுத் துறையினருக்கு 7 சதவீத மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நமது கல்விப் புலத்தில் குறைந்த முக்கியத்துவமே இத் துறைக்கு வழங்கப்பட்டு வருவதால் இத் துறை நிபுணர்களைப் பற்றிய தாக்கத்தை மாணவர்களின் மனதில் ஏற்படுத்த வேண்டியதன் தேவையை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
இன்றைய உலகின் பல்வேறு துறை சார்ந்த மனிதர்களைப் பற்றிய மாணவர்களின் மதிப்பீட்டினை உணர்ந்து தங்களுடைய தற்போதைய
நடத்தை, எண்ண ஓட்டம், உணர்வுபூர்வமான அனுபவங்களின் அடிப்படையில் இத் துறையினர் மாறுவது தேவை என்ற கருத்தும் இந்த ஆய்வின் முடிவில் வெளிப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us