தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மென் திறன்கள் - சாப்ட்ஸ்கில்ஸ்: சில தகவல்கள்

மென் திறன்கள் - சாப்ட்ஸ்கில்ஸ்: சில தகவல்கள்

மென் திறன்கள் - சாப்ட்ஸ்கில்ஸ்: சில தகவல்கள்


டிச 01, 2009 12:00 AM

டிச 01, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 01, 2009 12:00 AM டிச 01, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனிநபரின் ஆளுமைத் தன்மையைத் தீர்மானிப்பதில் சாப்ட் ஸ்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்துடன் சாப்ட் ஸ்கில் நேரடியாகத் தொடர்புடையது என்பதால் தற்போது பணி நியமனங்களைச் செய்வதற்கு முன்பாக இவற்றை ஒருவர் பெற்றிருக்கிறாரா என்பதை அறிவதில் நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.

இன்றைய தொழில்நுட்ப ரீதியான பொருளாதாரச் சூழலில் தொழில் நுட்பம் சார்ந்த திறன்கள் கட்டாயம் தேவைப்படுகின்றன. இவற்றுக்கான தேவை ஒரு போதும் குறையாது என்றாலும் கூடுதலாக மென் திறன்களை ஒருவர் பெற்றிருப்பதும் முக்கியமாகிறது. நிறுவனங்களின் வியாபார உத்திகளை செயல்படுத்துவதில் மென் திறன் முக்கியப் பங்காற்றுகிறது.

தகவல் பரிமாற்றம் என்ற பரந்த ஒரு பிரிவின் உட்பிரிவாக மென் திறன்கள் உள்ளன. வேறு வேறு பின்னணியிலிருந்து வந்து பணியாற்றும் இடங்களில் மென்திறன்களின் தேவை மிக அதிகம் தேவைப்படுவதுடன் இந்தத் திறன் போதிய அளவில் இல்லாதபோது ஊழியர்கள் தங்களது நோக்கங்களை புரிந்து கொள்ளுவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ்; எனப்படும் சக மனிதர்களுடன் கலந்து பழகும் திறன், குழு மனப்பான்மை, சமூக இயைவு, தொழில் தொடர்பான பாவனைகள், உடன்பாடு எட்டும் திறன், நடத்தை தொடர்புடைய கால மேலாண்மை, சுய ஊக்கம் மற்றும் குணம், வாடிக்கையாளர் சேவை புரியும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், தலைமைப் பண்புகள், மன நிலைப்பாடு போன்றவை தான் இன்று மென் திறன்களாக அறியப்படுகின்றன. ஒரு தனி நபரின் மென் திறன்களை மேம்படுத்த 4 முக்கியப் பிரிவுகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு நபரின் உணர்வுகளையும் முடிவெடுப்பதில் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் அறியும் சுய விழிப்புணர்வு முதல் தேவையாகும். மாறிவரும் சூழ்நிலைகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ப தனி நபரின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சுயக் கட்டுப்பாடு இரண்டாவது தேவையாகும்.

சமூகப் பின்னலுக்கு இடையூறு இன்ற தனி நபரின் உணர்வுகளைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டபின் அதற்கேற்ப செயல்படும் சமூக விழிப்புணர்வு மூன்றாவது தேவையாகும். பணிச் சூழலில் முரண்பாடுகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட குழுவை நமது செயல்பாட்டின் மூலமாக நேர்படுத்துவதும் அவர்களையும் மேம்படுத்துவதும் உறவு மேலாண்மை எனப்படுகிறது. இது 4வது தேவையாக உள்ளது.

இத் திறன்களை தற்போது மென்திறன் பயிற்சியாளர்கள் வழங்குகின்றனர். இதற்கான பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. இவற்றின் மூலமாக மென் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம். சில மணி நேரப் பயிற்சிகளின் மூலமாக எப்படி ஒரு தனி நபரின் குணாதிசயத்தை மாற்றிவிட முடியும் என்ற விவாதங்கள் நிலவினாலும் தற்போதைய வியாபார உலகின் தேவையாக இது மாறிவிட்டதால் இவற்றைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வியாபார உலகம் உள்ளது.

கல்லூரியில் சேரும் போதே மென் திறன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளத் துவங்குவது நல்லது என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். நமது கல்வி அமைப்பின் கூடுதல் தேவையாக மென்திறன் மேம்பாடு மாறியிருப்பதை புரிந்து கொண்டால் எதிர்காலம் வளப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us