தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வேலைவாய்பை உருவாக்குவோம்...

வேலைவாய்பை உருவாக்குவோம்...

வேலைவாய்பை உருவாக்குவோம்...


டிச 08, 2009 12:00 AM

டிச 08, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 08, 2009 12:00 AM டிச 08, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலை பட்டப் படிப்பை முடித்து வேலை தேடுவோருக்கு மிகுந்த நெருக்கடியாக அமைந்தது.

தனியார் நிறுவனங்கள் மீது இருந்த மோகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலானோர் பாதுகாப்பான அரசு வேலையில் பணிபுரிய விருப்பம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்
களில் 15 சதவீத மாணவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர். 30 க்கும் குறைவான சதவீத மாணவர்கள் உள்நாட்டில் பணியில் அமர்கின்றனர். மீதமுள்ள அனைவரும் தகுந்த வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்
படுகின்றனர்.
மாதச் சம்பளத்துக்காக உழைத்து தான் வருமானம் அதிகமாக பெற முடியும் என நினைக்க கூடாது. சுயதொழில் மூலமாகவும் அதிக வருமானம் பெற்று தங்கள் இலக்கை அடையலாம்.
சுயதொழில் பயிற்சி மற்றும் ஊக்கம் பெறும் மாணவர்கள் நெருக்கடி காலங்களிலும் பிற நிறுவனங்களின் மூலமாகவோ, சொந்த தொழில் மூலமாகவோ வேலை வாய்ப்பை பெறுவர். முதலில், மாணவர்கள் பணியில் அமர என்ன செய்ய வேண்டும்? என்ற இலக்கை ஆராய வேண்டும்.
ஒருவரிடம் உள்ள சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறன் அடிப்படையில் தான் 70 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும். பல முன்னணி
நிறுவனங்கள் இதன் அடிப்படையில் தான் ஊழியர்களை பணி அமர்த்துகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் வெளித் தோற்றத்தின் மீது மட்டும் தான் அக்கறை காட்டுகின்றனர். வேலை அளிப்பவர்கள் தங்கள் ஊழியர்கள் தகுந்த திறமை பெற்று இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சாப்ட் ஸ்கில் என்பது ஒருவருடைய ஆளுமை, பேச்சுத்திறமை, விழிப்புணர்வு, கற்கும்திறன் ஆகிய அனைத்தையும் குறிக்கும் பொதுவான வார்த்தை
யாகும். சாப்ட் ஸ்கில் பற்றி பாடத்திட்டத்தில் ஒரு பிரிவை கொண்டு வர வேண்டும். பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்
களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி (Employment Orientation Module -OEM) என்னும் பயிற்சி வகுப்பை ஒரு மாத காலமாவது கட்டாயம் அளிக்க வேண்டும். சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படும் இத்தகைய பயிற்சி வகுப்புகளால் மாணவர்கள் பலனடைவர்.  
கல்விக்கும்,பணிக்கும் இடையே பெரிய இடைவெளி ஒன்று இருக்கிறது. படிப்பை முடித்து வேலை தேடுபவர்களுக்கு மத்தியில், மற்றவர்
களுக்கு வேலை அளிக்கும் தொழிலதிபராவது மாணவர்
களின் உயரிய லட்சியத்தை பொறுத்தது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இந்த நடைமுறை மாணவர்களின் பள்ளிக்கல்வியிலிருந்து வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் மூலமாகவே 10/12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொழில் சார்ந்த பட்டப்படிப்புகள் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு உதவலாம்.
சில வழிமுறைகள்:
முதலாவதாக, தொழில் சார்ந்த படிப்புகளை கட்டாயப் பாடப்பிரிவாக பத்தாம் வகுப்பிலிருந்தே கொண்டு வரவேண்டும். பட்டப்படிப்பிலும் முதல் வருடம்/ முதல் செமஸ்டர் முடிய தொழிற் கல்வி சார்ந்த ஒரு பாடப்
பிரிவை கற்றுத் தர வேண்டும்.
இரண்டாவதாக அந்த பகுதியில் உள்ள வெற்றி பெற்ற தொழிலதிபர்களை பகுதி நேர ஊழியர்களாக நியமித்து மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த யுக்திகளை கற்றுத்தர வேண்டும். அறிவியல் துறையின் உதவி மற்றும் ஒத்துழைப்புடனும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிஒதுக்கீட்டின் மூலமாகவும் தொழிற் கல்வியை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் அரும்பாக இருக்கும் தொழிற்கல்வியை மலராக மாற்றி விடலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us