தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீங்கள் நினைத்ததை உங்களது வாரிசுகள் சாதிக்க வேண்டுமா

நீங்கள் நினைத்ததை உங்களது வாரிசுகள் சாதிக்க வேண்டுமா

நீங்கள் நினைத்ததை உங்களது வாரிசுகள் சாதிக்க வேண்டுமா


டிச 22, 2009 12:00 AM

டிச 22, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 22, 2009 12:00 AM டிச 22, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்த காலக்கட்டத்தில் பதியும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்த உண்மை குறிப்பாக, எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும்?

குழந்தைப் பருவம் என்று வீட்டிலேயே அடைத்துவைக்கும் நிலைதான் பெரும்
பாலான படித்த பெற்றோரது செயலாகவும் இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது. தெரிந்தோ, தெரியாமலோ குழந்தையின் விளையாட்டு திறனையும், கற்கும் திறனையும் தடுக்கவே பல்வீடுகளில் வீடுகளில் முயற்சிகள் நடக்கின்றன. மாறாக, குழந்தையின் விளையாட்டுத்திறன், கற்கும் திறன் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையிலான சுழலை கொண்டிருப்பது சில வீடுகள் மட்டுமே...
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாக வேண்டிய இன்றைய காலகட்டத்தால், குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு என்பது கால அட்டவணை போட்டுதான் கொடுக்கப்படுகிறது. அதை தொடாதே, இதை இழுக்காதே என்ற அதற்றல்களால், மிக மிக சுதந்திரமாக, தனக்கு பிடித்ததை செய்ய வேண்டிய பிஞ்சு மூளைகளில், இப்போதே அழுத்தம் உருவாகிறது. செய்யக்கூடாததை செய்யவேண்டாம் என்று கூறுவதைவிட, செய்யக்கூடியதை செய்ய ஏதுவான சுற்றுச்சூழலை அமைத்துக் கொடுக்க
வேண்டியது அவசியம்.
தங்களது குழந்தை எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை. தான் நினைத்த படியே வரவேண்டும் என்பதற்காக அதையே திரும்ப, திரும்ப சொல்லி குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.   எனவே, அனைத்து வசதிகளையும் கொண்ட சுற்றுச்சூழலை அவர்களுக்கு
ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மேலைநாட்டினர் குழந்தை வளர்ப்பை ஒரு கலையாக கருதி, அதன் முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அந்த முறைகள் இந்தியாவிலும் பரவி வருகிறது.
குழந்தை வளர்ப்பு சிறப்பு நிபுணர் வெங்கட்ரமணி கூறியதாவது:   சிறப்பான வளர்ப்பு முறை என்பது பிறப்பிலிருந்தே ஆரம்பம். இளம் பருவத்தில் மூளைக்கு அதிக ஆற்றல் உருவாகிறது. அப்போது அதிக சக்தி தேவைப்படுகிறது. அதற்கு ஆரோக்கியமான உடல் நிலை மிக அவசியம். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். உடலும், மனதும் புத்துணர்ச்சி பெற விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகளை பெற்றோர் தான் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் கூட, தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. தான் படிக்க முடியாததை தனது வாரிசுகள் படிக்க வேண்டும், செல்வத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக, இளம் நெஞ்சங்களில் அழுத்தத்தை உருவாக்காமல், அவர்களுக்கு அதன் மீது ஆர்வத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை செய்தால் போதும்... அவர்கள் மிக மகிழ்ச்சியாக நீங்கள் நினைத்ததற்கு மேலாக சாதனை புரிவார்கள்.
உதாரணமாக, உங்களது குழந்தை கலெக்டராக வேண்டும் என்பது உங்களது ஆசை என்றால், பள்ளிப் பருவத்திலேயே கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு, கலெக்டருக்கு அளிக்கப்படும் மரியாதைகளை உணரச் செய்யுங்கள். இதன்மூலம் தானும் கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை அவர்களது மனதில் துளிர்விடும். அப்போது, கலெக்டர் ஆவதற்கான பயிற்சி முறைகள், எழுத வேண்டிய தேர்வுகள் ஆகியவற்றை படிப்படியாக தெரிவிக்க வேண்டும்.
இதுவே, தனது குழந்தை டாக்டராக வேண்டும் என்றால், ஸ்டெதாஸ்கோப் போன்ற மருத்துவ உபகரணங்களை காண்பித்து, தானும் ஒரு டாக்டர் என்ற எண்ணத்தை குழந்தைப் பருவத்திலேயே உருவாக்கலாம். வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது, மனதில் எந்தவித அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது போன்றவையும் அவசியம். இவற்றை சரியாக செய்தால், குழந்தையின் மனதில் அவை லட்சியமாக பதிந்து, படிப்படியாக அதற்கான செயல்களில் இறங்கிவிடுவார்கள். இதற்கு பெற்றோரது சரியான அணுகுமுறை அவசியம். அதேசமயம், குழந்தைக்கு பிடிக்காத ஒன்றை, செய்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களது, ஆர்வத்தையும், விருப்பத்தையும் உணர்ந்து அதற்குரிய வகையில் ஒரு நண்பரைப் போல ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. பத்துவயதிற்கு பிறகு, அவர்களது அறிவு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களை
சரியான திசைக்கு வழிகாட்டுங்கள்; ஊக்கம் அளியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us