தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கனவு தொழிற்சாலை வேலைகள்

கனவு தொழிற்சாலை வேலைகள்

கனவு தொழிற்சாலை வேலைகள்


ஜன 12, 2010 12:00 AM

ஜன 12, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 12, 2010 12:00 AM ஜன 12, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துணை நடிகர்கள், இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், நடன இயக்குனர்கள், எடிட்டர்ஸ், ஒலி, ஒளி அமைப் பாளர்கள், கதைக்கேற்ப அரங்குகளை வடிவமைத்து அலங்கரிப்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், ஒப்பனை கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிபதிவாளர்கள் என்று ஏராளமான திறமைசாலிகள் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றனர். இது தவிர கதை, திரைக்கதை அமைப்பவர்கள், வசனம் எழுதுபவர்கள், பாடல் ஆசிரியர்கள் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், அந்த படத்தில் இடம்பெறும் இயக்குனரில் இருந்து கதை, திரைக்கதை அனைத்தையும் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார். இயக்குனர் நியமிக்கப்பட்ட பின் தயாரிப்பாளர் தேர்வு செய்த கதைக்கேற்ப படத்தினை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் முடிவு செய்கிறார். எடிட்டிங், பாடல், நடனம், நடிப்பு என்று சினிமாவின் ஒவ்வொரு காட்சிகளும் இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப கேமராவில் பதிவு செய்யப்படும். இதில் பணியாற்றுபவர்கள் கற்பனை திறன், சமயோசிதம், இரவு, பகல் பாராமல் உழைப்பது என்று தங்களின் பங்களிப்பை அதிகமாக செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
படத்தில் பங்குபெறும் நடிகர்களுக்கு தேவையான உடைகளை வடிவமைப்பதில் இருந்து ஒப்பனை, நடனம் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் எல்லாவற்றையும் கற்றுவைத்திருப்பவர்கள் அல்லது ஓரளவிற்கு தெரிந்து வைத்திருப்பவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் முன்னேற்றம் காண்பதோடு தங்களுக்கான நிரந்தரமான இடத்தை சினிமாவில் தக்கவைத்துக் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் சினிமாவில் திறமை, அதிர்ஷ்டம், உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மூன்றும் அமைந்தவர்கள் எளிதாக வாய்ப்பினை பெற்று எவரும் நினைத்து பார்க்க முடியாத புகழினை எளிதாக சம்பாதித்துக் கொள்கின்றனர்.
சினிமா சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை கற்று கொடுப்பதற்காக ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்டியூட் ஆப் இந்தியா, லா காலேஜ் ரோடு, பூனே411004.
மூன்று ஆண்டு டிப்ளமோ கோர்ஸ், பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டைரக்ஷன், சினிமோட்டோகிராபி, எடிட்டிங் குறித்து கற்றுதரப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஆடியோகிராபி பயிற்சி வகுப்பில் சேரலாம். நுழைவுத்தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சத்தியஜித்ராய் பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட். இ.எம்.பைபாஸ் ரோடு, பஞ்சசாயர், கோல்கட்டா700094.
மூன்று ஆண்டு டிப்ளமோ கோர்ஸ், டைரக்ஷன் அண்டு ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங், மோசன்பிக்சர் போட்டோ கிராபி, எடிட்டிங். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சவுண்ட் ரிக்கார்டிங் பிரிவிற்கு
இயற்பியலில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பதாரர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், சி.ஐ.டி.,கேம்பஸ், தரமணி, சென்னை600113 .
மூன்று ஆண்டு டிப்ளமோ கோர்ஸ். டைரக்ஷன் அண்ட் ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சினிமோட்டோகிராபி, பிலிம் பிராசஸிங், சவுண்ட் ரிக்கார்டிங் அண்டு இன்ஜினியரிங் பிளஸ் 2 வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை எடுத்து படித்தவர்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எடிட்டிங் பிரிவிற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும், நடிப்பிற்கான ஒரு ஆண்டு சான்றிதழ் பயிற்சிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஜோதி சித்ராபன் பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், காக்லிப்பரா, கவுகாத்தி 781019
மூன்று ஆண்டு டிப்ளமோ, மோஷன் பிக்சர் போட்டோகிராபி, ஆடியோ கிராபி, விடியோ எடிட்டிங் மற்றும் சினிமா, டிவியில் நடிப்பதற்கான சான்றிதழ் பயிற்சி. 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். இதற்காக நடத்தப்படும் எழுத்து தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூன் மாதத்தில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்.
திரைப்பட தொழில் நுட்பத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் இடங்கள் வருமாறு:
சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிக்கேஷன், செயின்ட் சேவியர் காலேஜ், மும்பை400001.
ஏசியன் அகாடமி ஆப் பிலிம் அண்டு டெலிவிஷன், மார்வா ஸ்டுடியோ காம்ப்ளக்ஸ், எப்சி14/15, பிலிம் சிட்டி, செக்டர்16 ஏ, நொய்டா201301, உத்தரபிரதேசம்.
எம்.ஏ.,இன் பிலிம் ஸ்டடி அட் ஜெதாப்பூர் யூனிவர்சிட்டி, கோல்கட்டா700073.
ரூபம் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எலெக்ட்ரானிக் கம்யூனிக்கேஷன், வில்லேஜ்குண்டா(ஆம்பர்), ஜெய்பூர்303101.
சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் இமேஜிங் டெக்னாலஜி(சிடிட்), திருவனந்தபுரம்695022.
அண்ணா யூனிவர்சிட்டி, ஆடியோ விசூவல் ரிசர்ச் öஎஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இலவச "கேட்' பயிற்சிசன்டர்,சென்னை600025.
டெக்னிக்கல் டீச்சர்ஸ் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், செக்டர் 26, சண்டிகர்160019.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், பல்டி, ஆமதாபாத்380007.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us