தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்

நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்

நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்


ஜன 12, 2010 12:00 AM

ஜன 12, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 12, 2010 12:00 AM ஜன 12, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கி வருகிறது. இக்கல்வி நிறுவனம் ஆசியாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்களிலேயே மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமை பெற்றது.


அரண்மனை போல் தோற்றமளிக்கும் இதன் முகப்பு கட்டடம் பாட்டியாலா மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்த கல்வி நிறுவனம் தேசிய மற்றும் உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களையும், சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
1961ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இக்கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 1973ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இது 268 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ள அனைத்து வசதி
களும் இந்த கல்வி நிறுவனத்தில் உண்டு. தற்போது இதில் ஜிம்னாஸ்டிக் அரங்கம், நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம், சைக்கிளிங் பயிற்சி மைதானம், டென்னிஸ் அரங்கம், ஹாக்கி மைதானம், அத்லெடிக் டிராக் மற்றும் திறந்த வெளி மைதானங்கள் ஆகியவை சர்வதேச தரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு துறை சம்பந்தப்பட்ட பிரிவுகள் மட்டுமல்லமால் மேலும் பல்வேறு பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன.
டிபார்ட்மென்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசன்,
டிபார்ட்மென்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் பயோகெமிஸ்ட்ரி,
டிபார்ட்மென்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி,
டிபார்ட்மென்ட் ஆப் ஜெனரல் தெரபி அன்டு மெத்தேட்ஸ் ஆப் டிரெய்னிங்,
டிபார்ட்மென்ட் ஆப் எக்ஸர்சைஸ் பிசியாலஜி,
டிபார்ட்மென்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் ஆந்த்ரோபோமெட்ரி,
டிபார்ட்மென்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிசியன்,
டிபார்ட்மென்ட் ஆப் பயோமெக்கானிக்ஸ் போன்ற துறைகள் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு பரிணாமங்களை கற்றுத்தருகிறது.
பாடப்பிரிவுகள்
விளையாட்டு பற்றிய பட்டமேற் படிப்புகள், டிப்ளமோ பாடப்பிரிவுகள் மற்றும் சான்றிதழ் பாடப்பிரிவுகள் போன்றவை இங்கு பயிற்றுவிக்கப்
படுகின்றன.
எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் கோச்சிங்,
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மெடிசன்,
டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங், மற்றும்
ஸ்போர்ட்ஸ் கோச்சிங் பற்றிய ஆறு வார கால சான்றிதழ் படிப்புகள் போன்ற பாடப்பிரிவுகள் இங்கு உள்ளன.
இங்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு பிரிவுகள்:
ஜிம்னாஸியம், நீச்சல், வாலிபால், ஹேண்ட்பால், ஜூடோ, ஹாக்கி, புட்பால், டென்னிஸ், கிரிக்கெட், வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், சைக்கிளிங், இறகுப்பந்து, அத்லெடிக் மற்றும் கோல்ப் போன்ற விளையாட்டுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் இக்கல்வி நிறுவனத்தால் தேசிய அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் விளையாட்டை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண்களை விளையாட்டு துறையில் சாதிக்க வைக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்க பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துகிறது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டு விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us