ஜன 19, 2010 12:00 AM
ஜன 19, 2010 12:00 AM
இதை தவிர்க்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களுக்கு ஒழுக்கத்தை கண்டிப்போடு கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக கணவன், மனைவி இருவரும் ஒரு ஒழுங்குமுறையை தங்கள் வீட்டில் வகுத்துக் கொண்டு அதை தவறாமல் தாங்களும் கடைபிடித்து குழந்தைகளையும் பின்பற்றச்செய்ய வேண்டும்.
காலையில் நேரத்தோடு எழுவது, குளிப்பதற்கு முன்பு தேவைப்படும் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வது, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது, சரியான நேரத்தில் பாடங்களை படிக்க தூண்டுவது என்று அனைத்திற்கும் பெற்றோர் முன்மாதிரியாக நடந்து தங்கள் குழந்தைகள்
தாங்கள் வகுத்துள்ள ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கிறதா என்பதை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
தவறு செய்யும் குழந்தைகளை அதன் தாயார் திட்டும்போது குழந்தைக்கு ஆதரவாக தந்தை பேசுவதோ அல்லது குழந்தையை கண்டித்ததற்காக அதன் முன்னிலையில் மனைவியிடம் கோபித்துக் கொள்வதோ அறவே இருக்கக்
கூடாது. தவறு செய்த குழந்தையிடம் தந்தை அதன் தவறை சுட்டிக்காட்டி தாயார் திட்டியது சரிதான் என்பதை உணரச்செய்து இனிமேல் தாய் திட்டும் அளவிற்கு நீ நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அதேப்போன்று இதே காரணத்திற்காக தந்தை குழந்தையை
திட்டினால் தாய் அதற்கான காரணத்தை தெரிவித்து குழந்தையை நல்வழிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
