ஜன 26, 2010 12:00 AM
ஜன 26, 2010 12:00 AM
இதனால் முன் எப்போதையும் விட, தற்போது டயட்டீசி யனின் தேவை அதிகரித்துள்ளது. இப்போது இளம் வயதினரிடையே தவறான உணவுப் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, நேரம் தவறி சாப்பிடுதல், அதிக கலோரி உள்ள பாஸ்ட் புட் அயிட்டங்கள், காலம் நேரமின்றி எந்நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருத்தல், வாகனங்களில் அதிக நேரப் பயணம் ஆகியன, உடல் நலப் பிரச்னைகளுக்கு காரணமாகியுள்ளன. இதனால், இளம் வயதிலேயே இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அன்றாட உடல் உழைப்புக்கு ஏற்ப தேவைப்படும் கலோரி அளவு. அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம். எது சாப்பிடக் கூடாது என்பதை அறிவுறுத்துவது டயட்டீசியன் பணி. உடல் பருமனாக இருப்பவர்கள் சாதாரண உடல் எடைக்கு திரும்புவதற்கும், குறைவான உடல் எடை கொண்டவர்கள் சரியான உடல் எடையை அடைவதற்கும் இவர்களுடைய ஆலோசனை அவசியம். நோயற்ற வாழ்வுக்கும், நீண்ட கால ஆரோக்கியத்துக்கும் டயட்டீசியனைத் தேடி செல்லும் காலமாக உள்ளது. இது போன்ற பிரச்சனை <உள்ளவர்கள், மருத்துவரை சந்திக்கும் போது, டயட்டீசியனை சந்திக்க றிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பிட்ட நபரின் உடல் நல பிரச்னையை டாக்டருடன் செய்து கொண்ட ஆலோசனைகளின் படி டயட்டீசியன், உணவுகளை பரிந்துரைக்கிறார். ஆகவே, முன் எப்போதும் இல்லாத அளவில் டயட்டீசியனின் தேவை இப்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு தன்மை கொண்டது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், வசதி வாய்ப்புகளும் வேறு பட்டது. ஆகவே, ஒருவருக்குப் பரிந்துரைக்கப்படும் உணவை இன்னொருவருக்குப் பரிந்துரைக்க முடியாது. டயட்டீசியன் ஆக விரும்புவோர், உடலியல் மற்றும் உயிரியலில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். உணவு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் நல்ல ஆலோசகராகவும் இருக்க வேண்டும். ஹெல்த் பிட்னஸ் மையங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ மனைகள், சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற முடியும். விளையாட்டுக்குழு, தனி நபர்களுக்கும் ஆலோசகராகவும் செயல்பட முடியும். தனி கிளினிக் வைத்து நடத்தவும் முடியும். பிளஸ் 2 முடித்த பின் சேரக்கூடிய ஹோம் சயின்ஸ் படிப்புகளிலும் எம்.எ.சி., படிப்பிலும் உணவியல் மற்றும் உணவூட்டம் சிறப்புப் பாடமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன் நுண்ணூட்டவியலுக்கான தனிப் பட்டயப்படிப்புகளும் உள்ளன. படிக்கும் காலத்தில், மருத்துவமனைகளில் டயட்டீசியனிடம் பயிற்சிக்காக மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது படித்து முடித்த பின், பணியாற்றுவதற்கு உதவியாக அமையும். இத்துறையில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளும் உள்ளன. டயட்டீசியன் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்கள் * ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹைஜின் அண்ட் பப்ளிக் ஹெல்த், கோல்கட்டா. * அவினாசி லிங்கம் இன்ஸ்டிடியூட் பார் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹையர் எஜூகேசன் பார் உமன், கோவை. * நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசியன், ஐதராபாத். * யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சுரல் சயின்ஸ், தார்வாத்.
