/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'
/
ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'
டிச 18, 2025 11:05 PM
டிச 18, 2025 11:05 PM

பள்ளிக்கல்வித்துறை மெதுவாக கற்கும் மாணவர்களை மேம்படுத்த திறன் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் திறன் மிக்கவர்கள், திறன் குறைந்தவர்கள் என மதிப்பெண் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்.
மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று ஏதாவது ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றாலும் திறன் குறைவான மாணவராக கருதப்படுகிறார். கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டமும், மதிப்பெண் குறைவான மாணவர்களுக்கு தனியாக பயிற்சி புத்தகங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பாடப்புத்தகத்தின் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை.
இதனால் ஒரே வகுப்பிலேயே இரு பிரிவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெறுகிறது. இதனடிப்படையிலேயே முதல் பருவ தேர்வு நடைபெற்றது. அதில் திறன் மாணவன் மதிப்பெண் கூடுதலாக பெற்றாலும் கூட அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பிப்ரவரி வரை திறன் நிலையிலேயே பயிற்சி பெற வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உயரதிகாரிகளில் வழிகாட்டுதலின்படி போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் பயிற்சி மையங்ககளை போன்று தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இந்த திட்டம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
திறன் மாணவர்கள் பாடத்திட்டத்தை படிக்காமல் அடுத்த வகுப்புக்கு சென்றால் எந்த முறையில் படிப்பார் என்று பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் படிப்பு குறித்து புரியாமல் உள்ளனர். அதில் ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் இருவிதமான வகுப்பு நடத்துவதும், திறன் மாணவர்களுக்கு வார இறுதியில் தேர்வு, மதிப்பெண் கூகுள் படிவத்தில் நிரப்புதல் என்று தடுமாறி வருகின்றனர்.
திறன் பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர் அதற்கான தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் வழக்கமான பாடத்திட்டத்திற்கு மாற முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை திறன் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மாணவர்களுக்கு வழக்கமான பாடங்களுடன், திறனை அதிகரிக்க தேவையான குழப்பமில்லாத திட்டத்தை உருவாக்க வேண்டுகின்றனர்.

