/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இந்தியப் பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்களில் சேரலாமா?
/
இந்தியப் பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்களில் சேரலாமா?
இந்தியப் பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்களில் சேரலாமா?
இந்தியப் பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்களில் சேரலாமா?
ஜன 20, 2014 12:00 AM
ஜன 20, 2014 12:00 AM
வெளிநாட்டுக் கல்வி என்பது, வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலையில் சென்று படிப்பதுதான் என்றில்லை. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்களில் சென்று படிப்பதும் அதில் அடக்கம்.
வெளிநாட்டில் உள்ள தங்களின் வளாகங்களில் சேர்ந்து படிப்பதற்கான பல்வேறு காரணங்களை, இந்திய பல்கலைகள் தெரிவிக்கின்றன. அவை,
* வெளிநாட்டு வசதிகளுடன், அந்த சூழலில் படிக்கும் வாய்ப்பினைப் பெற முடிவதோடு, தாய்நாடான இந்தியாவுடனும் நீடித்த தொடர்பிலும் இருக்க முடியும்.
* இந்த வளாகங்களில் படிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்புகளைப் பெறுவதோடு, பல நாடுகளின் கலாச்சாரம், மொழி மற்றும் பண்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.
* வெளிநாட்டில் செயல்படும் இந்தியப் பல்கலைகளின் வளாகங்கள், சர்வதேச தேவைகளையும் கருத்தில் கொண்டு, இந்தியப் பாடத்திட்டத்தை வழங்குகின்றன.
* சர்வதேச சூழலில் பணிபுரிந்து வாழும் வகையில் மாணவர்களைப் பழக்கப்படுத்த, வெளிநாட்டுக் கல்வி என்பது ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. எனவே, வெளிநாட்டு வளாகங்களில் படிப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
* மூன்று நகர(Tri city) படிப்பு என்ற திட்டம், உலகின் மூன்று பகுதிகளைப் பற்றி அறிந்துகொள்ள, ஒரு மாணவருக்கு வாய்ப்புகளைத் தருகிறது. சாதாரண வெளிநாட்டுக் கல்வி அனுபவத்திலிருந்து இது சற்று மாறுபட்டது.
* இந்தியப் பல்கலைகளின் வெளிநாட்டு வளாகங்கள், வகுப்பு நடவடிக்கைகள்(class activities), விருந்தினர் உரை மற்றும் நடைமுறை வாழ்வுக்கான புராஜெக்ட்டுகள் ஆகிய அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றன.
மேலே குறிப்பிட்டபடி, பல சாதகமான அம்சங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. எனவே, அங்கே சென்று படிக்க விரும்புவோர், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றியும் அறிய வேண்டுமல்லவா?
செலவின விபரங்கள்
* வெளிநாட்டில் தங்களின் வளாகங்களை வைத்திருக்கும் இந்தியப் பல்கலைகள், உள்நாட்டில் தாங்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கும், வெளிநாட்டு வளாகத்தில் தாங்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கும் பெரிய வித்தியாசத்தை கொண்டிருப்பதில்லை.
* வாழ்க்கைச் செலவினம் தொடர்பாகவே, வெளிநாட்டில் கூடுதல் செலவாகிறது. வெளிநாட்டில் விடுதியில் தங்கிப் படிக்க ஆகும் செலவு, இந்தியாவில் விடுதியில் தங்கிப் படிக்கும்போது ஆகும் செலவைவிட, 3 முதல் 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.
* அதேசமயம், நண்பர்களோடு அறை எடுத்தோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கினால், செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
உதாரணமாக, மணிப்பால் பல்கலையின் துபாய் வளாகத்தில் படித்தால் ஆகும் செலவும், அந்தப் பல்கலையின் இந்திய வளாகத்தில் ஒரு வெளிநாட்டு இந்தியர் NRI கோட்டாவில் படிப்பதற்கு ஆகும் செலவும் சமமாக உள்ளது.
* S P Jain -ன் ஒரு வருட GMBA படிப்பு, கல்விக் கட்டணம், புத்தகங்கள், விசா மற்றும் தங்கும் வசதி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, 45,515 அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
* அதேசமயம், 3 ஆண்டுகளுக்கும் குறைந்த பணி அனுபவம் கொண்ட தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கான MGB படிப்பின் செலவு 36,815 அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
* அமைட்டி பல்கலைக்கழக வட்டாரங்கள், தமது வெளிநாட்டு வளாகத்தில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்பட்டு, அதன்மூலம் கட்டணச் சுமை குறைக்கப்படுவதாக தெரிவித்தன.

