sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகளின் வளாகங்களும் நடைமுறை சிக்கல்களும்

/

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகளின் வளாகங்களும் நடைமுறை சிக்கல்களும்

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகளின் வளாகங்களும் நடைமுறை சிக்கல்களும்

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகளின் வளாகங்களும் நடைமுறை சிக்கல்களும்


டிச 31, 2013 12:00 AM

டிச 31, 2013 12:00 AM

Google News

டிச 31, 2013 12:00 AM டிச 31, 2013 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2010ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மசோதாவை நிறைவேற்ற தொடர்ச்சியாக முயற்சித்து வரும் மத்திய மனிதவள அமைச்சகம், தற்போது யு.ஜி.சி வழியை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்காக நாடு விட்டு நாடு செல்லும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவிலேயே வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைக்க அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்ற கடந்த 2010ம் ஆண்டு முதலாகவே மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முயற்சித்து வந்தது. இதன்மூலம், வெளிநாட்டுப் பட்டங்களை இங்கேயே படித்துப் பெற முடியும்.

ஆனால், தற்போது வரை அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால், UGC -ன் வழியைப் பின்பற்றிச் செல்ல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

UGC விதிமுறைகளின்படி...

வெளிநாட்டுக் கல்வி வழங்குநர்(FEP) என்று UGC ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தை(FEI) அறிவித்தவுடன், அது தனது வளாகத்தை இந்தியாவில் துவங்கலாம்.

இந்தியாவில் வளாகத்தை தொடங்க விரும்பும் ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனம், ஒரு நிறுவனமாக, கம்பெனிகள் சட்டம், பிரிவு 8ன் படி, பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் வளாகம் தொடங்க விரும்பும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், QS மற்றும் ARWU ஆகிய தரநிலைகளின் படி, உலகின் 400 சிறந்த பல்கலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் கல்வி நிறுவனம், அந்நாட்டில், குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது, லாப நோக்கமற்ற சட்டப்பூர்வ நிறுவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், முறையான அங்கீகரிப்பு நிறுவனத்தால், சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நாட்டில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், சர்வதேச அளவில் முறையான நடைமுறைகளின் கீழ், அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் தனது வளாகத்தில் ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனம் வழங்கும் ஒரு படிப்பு, அக்கல்வி நிறுவனம் தனது தலைமையிடத்தில் வழங்கும் படிப்பிற்கு இணையான தரத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனம், UGC -ஆல் வெளிநாட்டு கல்வி சேவை வழங்குநர் என்று அறிவிக்கப்படும் முன்னதாக, அது தன்னிடம் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வைப்புத் தொகையை கொண்டிருக்க வேண்டும்.

அதேசமயம், இந்தியாவில் வளாகம் அமைக்கும் ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனம், விதிமுறைகளை மீறி செயல்பட்டாலோ அல்லது UGC சட்ட நெறிமுறைகளை மதிக்காமல் இயங்கினாலோ, அதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தனது வைப்புத் தொகையையும் இழக்க நேரலாம்.

மாறுபட்ட பட்டம்

வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தின் உள்நாட்டு வளாகத்தால் வழங்கப்படும் பட்டம், வெளிநாட்டுப் பட்டமாகவே கருதப்படும். அந்தப் பட்டம், இந்தியப் பல்கலைக்கழக அமைப்பால், அதன் விதிமுறைகளின் படி, சமமான ஒன்றாக கருதப்படலாம்.

இந்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேறுமானால், இந்திய கல்வி நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கும் ஆசையை வைத்துகொண்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

அவர்கள் வருவார்களா?

வெளிநாட்டுப் பல்கலைகளை இங்கே வரவைக்கும் முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்கும் அதே வேளையில், உலகின் முதல்தர பல்கலைக்கழகங்களின் நிலை என்ன என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

யேல், கேம்ப்ரிட்ஜ், எம்.ஐ.டி மற்றும் ஸ்டான்போர்டு உள்ளிட்ட உலகின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள் எதுவும், இந்தியாவில் தங்களின் வளாகங்களைத் திறக்க இதுவரை விரும்பவில்லை. ஆனால் அந்தளவு அறியப்படாத, சுமாரான உயர் கல்வி நிறுவனங்களே, இந்தியாவில் நுழைய ஆர்வம் காட்டுகின்றன.

தங்களின் சொந்த நாட்டில், லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும், கல்லாக் கட்ட நினைக்கும் பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இங்கே வர யோசிக்க வைக்கின்றன.

பல முக்கிய வெளிநாட்டுப் பல்கலைகள் இங்கே வளாகம் திறக்க விரும்பவில்லை என்றாலும்கூட, இந்திய மாணவர்களை தங்களின் நாட்டிற்கு வரவழைக்க அவை அதீத ஆர்வம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல இந்திய பல்கலைகளுடன், அவை ஒருங்கிணைப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளன. மாணவர் பரிமாற்ற திட்டங்களும் தடையின்றி தொடர்கின்றன.

ஏனெனில், இந்திய மாணவர்களை ஈர்க்கும் வகையில், பல உதவித்தொகை திட்டங்கள் மற்றும் Executive education programme போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள், அந்த வெளிநாட்டுப் பல்கலைகள் இந்தியாவில் வளாகம் தொடங்கும் அளவுக்கு போகுமா? என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வியாகவே உள்ளது.

இந்தியாவில் வளாகம் வைத்துள்ள வெளிநாட்டுப் பல்கலைகள்

* Virginia Polytechnic Institute and State University (Virginia Tech) - USA
* Schulich School of Business - Canada
* SDA Bocconi - Italy

இந்தியாவில் மூடப்பட்ட வெளிநாட்டுப் பல்கலை வளாகங்கள்

* Manchester Metropolitan University
* University of Strathclyde.






      Dinamalar
      Follow us