/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
முடிந்தது 10ம் வகுப்பு - மேல்நிலையில் என்ன படிக்கலாம்?
/
முடிந்தது 10ம் வகுப்பு - மேல்நிலையில் என்ன படிக்கலாம்?
முடிந்தது 10ம் வகுப்பு - மேல்நிலையில் என்ன படிக்கலாம்?
முடிந்தது 10ம் வகுப்பு - மேல்நிலையில் என்ன படிக்கலாம்?
மே 28, 2014 12:00 AM
மே 28, 2014 12:00 AM
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்கள், தங்களின் எதிர்கால இலக்கை அடைய, மேல்நிலைப் பிரிவில் எந்த பிரிவு பாடத்தை தேர்வு செய்யலாம் என்பது குறித்த சிந்தனையிலும், குழப்பத்திலும் இருப்பார்கள்.
இந்தியப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மேல்நிலை பள்ளிப் படிப்பில், அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு பாடங்கள் வழங்கப்படுகின்றன. கார்பரேட் நிறுவனங்கள், வணிகம் மற்றும் அதுதொடர்பான பணிகளில், எதிர்காலத்தில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், வணிகவியல் பிரிவை தேர்வு செய்வதே சிறந்தது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களின் குழப்பத்தை நீக்கி, அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடத்தை, சரியான இலக்கை அடையும் வகையில் தேர்வுசெய்ய வழிகாட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
வணிகம் சார்ந்த படிப்பு என்பது, பொருளாதாரம், கணக்கியல்(Accountancy), பிசினஸ் ஸ்டடீஸ் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியது. இத்துறையில், ஒரு மாணவர், தனக்கான படிப்பை கணிதம் அல்லது அது இல்லாமல் தேர்வு செய்யலாம்.
கணிதம் இல்லாமல் வணிகப் படிப்பை தேர்வுசெய்தால், அவர் தனது ஆப்ஷனல் பாடமாக, உடற் கல்வியியல், நுண்கலை, இசை, தகவல் பயிற்சிகள்(information practices), சுற்றுச்சூழல் படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்யலாம். இந்த ஆப்ஷனல் படிப்புகள், பள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
வணிகப் படிப்பை தனது பள்ளி மேல்நிலைப் பிரிவில் படித்த ஒருவர், கீழ்கண்ட துறைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். அவை,
அக்கவுண்டன்ட்(CA)
முதலீட்டு ஆய்வாளர்(Investment analyst)
டேக்ஸ் ஆடிட்டர் அல்லது டேக்ஸ் ஆலோசகர்
ஆடிட்டர்
மார்க்கெட்டிங் துறை
சரக்கு போக்குவரத்து துறை
ஈவென்ட் மேலாண்மை அல்லது பொதுமக்கள் தொடர்பு
சந்தை ஆய்வு(Market research)
சுற்றுலா மற்றும் பயணம்
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அல்லது நிறுவன செயலர் அல்லது காஸ்ட் அக்கவுண்டன்ட்
நிதி ஆய்வாளர்
புள்ளியியல் நிபுணர்
எகனாமிஸ்ட்
தொழில் முனைதல்
இதழியல் அல்லது மாஸ் கம்யூனிகேஷன்
ஆசிரியர் அல்லது பேராசிரியர்
அக்கவுண்ட்ஸ் அல்லது பைனான்ஸ் அல்லது வங்கியியல்
சட்டம் மற்றும் அதுசார்ந்த துறைகள்
மனிதவள மேம்பாடு
ஏற்றுமதி
ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல்
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம்
காப்பீடு அல்லது காப்பீட்டு கணிப்பாளர்
உற்பத்தி
ஸ்டாக் அல்லது செக்யூரிட்டீஸ் அல்லது பங்கு வர்த்தகம்.
கலைப் பிரிவை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கான வாய்ப்புகள் எண்ணிலடங்காதவை. எதிர்காலத்தில் பல்வேறான துறைகளை நீங்கள் தேர்வுசெய்ய முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, கலைப் பிரிவில், கீழ்கண்ட பாடங்களே அதிகளவில் வழங்கப்படுகின்றன. அவை,
ஆங்கில இலக்கியம்
வரலாறு
புவியியல்
சமூகவியல்
அரசியல் அறிவியல்
உளவியல்
பேஷன் துறை
இதர மொழிப் பாடங்கள்
மேலும், மேல்நிலைப் பிரிவில் கலைப் பிரிவுகளை தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு பல சுவாரஸ்யமான துறைகளில் கால் பதிக்கும் அருமையான வாய்ப்பும் அமைகிறது. அவை என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உளவியல் நிபுணர்
பத்திரிகையாளர்
கிராபிக் டிசைனர்
பேஷன் டிசைனர்
பேராசிரியர்
வழக்கறிஞர்
பொருளாதார நிபுணர்
ஆன்த்ரோபாலஜிஸ்ட்
பெர்சனல் எக்ஸிகியூடிவ்
பப்ளிக் ரிலேஷன்ஸ் எக்ஸிகியூடிவ்
சமூகவியல் ஆய்வாளர் மற்றும் சேவைப் பணியாளர்
பேஷன் நிபுணர்
நுண்கலை நிபுணர்
நடனக் கலைஞர்
போட்டோகிராபர்.

