தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மனிதர்களின் திறனை மேம்படுத்தும் கருவி ஏ.ஐ.,

மனிதர்களின் திறனை மேம்படுத்தும் கருவி ஏ.ஐ.,

மனிதர்களின் திறனை மேம்படுத்தும் கருவி ஏ.ஐ.,


அக் 12, 2026 11:11 AM

அக் 12, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

அக் 12, 2026 11:11 AM அக் 12, 2026 11:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மனிதர்களை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் அல்ல; அவர்களின் திறன், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்பு


உலகளாவிய திறன் மையங்கள் (ஜி.சி.சி.) அமைப்பதில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டில் சுமார் 1,700 ஜி.சி.சி. மையங்கள் உள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 2,100ஐ எட்டும். இதனால், இந்திய அலுவலகங்கள் உலகளாவிய தலைமையகங்களுடன் தடையின்றி இணைந்து செயல்படுவதற்கான உயர்தரத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு ஏ.ஐ. ஒரு உதவிக் கருவி


புதிய யோசனைகளை உருவாக்குதல், பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்தல், ஆய்வுக் கட்டுரைகளின் முக்கிய அம்சங்களைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளுதல் போன்றவற்றுக்கு ஏ.ஐ. உதவியாக இருக்கும். எனினும், ஏ.ஐ. வழங்கும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. மாணவர்களிடம் விமர்சனச் சிந்தனை அவசியம். சிந்திக்கும் திறனை ஏ.ஐ.யிடம் ஒப்படைக்காமல், அதை உதவிக் கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், நிரலாக்க அனுபவம் இல்லாத மாணவர்களும் இயல்பான மொழியில் தங்களது தேவைகளை விளக்கி, ஏ.ஐ. உதவியுடன் செயலிகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வணிகவியல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத படிப்புகளைப் பயிலும் மாணவர்களும் தங்களது யோசனைகளைச் செயல்படுத்த முடியும்.

அதேநேரத்தில், பிரச்னைகளை அடையாளம் காணுதல், சரியான கேள்விகளைக் கேட்டல், கிடைக்கும் முடிவுகளை விமர்சன ரீதியாக மதிப்பிடுதல் ஆகிய திறன்களும் அவசியம்.
ஹைபிரிட் பணிச்சூழலுக்கு தொழில்நுட்பத் தீர்வு


லாஜிடெக்கின் வர்த்தகச் செயல்பாடுகள் இரு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. 'லாஜிடெக் பார் பிசினஸ்' பிரிவு, அலுவலகங்கள் மற்றும் ஹைபிரிட் பணிச்சூழலுக்கான வீடியோ கான்பரன்சிங், கூட்டுப் பணி உள்ளிட்ட தீர்வுகளை வழங்குகிறது. மற்றொரு பிரிவு, தனிநபர் பயனர்களுக்கான கீபோர்டு, மவுஸ் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்குகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அலுவலகம் மற்றும் தொலைதூரப் பணி இணைந்த ஹைபிரிட் முறை அதிகரித்துள்ளது. இதனால் வெவ்வேறு நகரங்கள், நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடையின்றி இணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, சென்னையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகக் குழுவினருடன் தொடர்ந்து கலந்துரையாட வேண்டியுள்ளது. இதற்கு வீடியோ அழைப்பு மட்டும் போதாது. பங்கேற்பாளர்களைத் தெளிவாகப் பார்ப்பது, அவர்களின் பேச்சைக் கேட்பது, கூட்டத்தின் இயல்பான உரையாடல்களைப் புரிந்துகொள்வது ஆகியவற்றுக்கும் ஏற்ற தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.


- மனோஜ் சஹாய், தலைவர், லாஜிடெக் இந்தியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us