/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு!
/
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு!
டிச 30, 2024 12:00 AM
டிச 30, 2024 12:00 AM

புதுடில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், 'நெக்சஸ் கோஹார்ட்' திட்டத்தின் கீழ், இலவச பயிற்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
அறிமுகம்
புதுதில்லியில் உள்ள அமெரிக்கன் சென்டரின் பிரதான பிசினஸ் இன்குபேட்டரான 'நெக்சஸ்', தனது 20வது கூட்டு திட்டத்தை பிப்ரவரி 3, 2025ல் துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு, 15 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறது. தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமும் இரண்டு குழு உறுப்பினர்களை பயிற்சிக்கு அனுப்பலாம்.
அமெரிக்கத் தூதரகம், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி.டி.டி.ஐ., (GTDI) எனும் உலகளாவிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து 'நெக்சஸ்' 20வது கூட்டமைப்பிற்கான பயிற்சியை வழங்க உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 230 இந்திய தொழில்முனைவோர் மற்றும் 19 கூட்டமைப்புகள் 'நெக்சஸ்'க்கு தேர்வாகி செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூட்டாக 90 மில்லியன் டாலர்கள் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பயிற்சி
அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்களால் அளிக்கப்படும் 'நெக்சஸ்' திட்டத்தில் 9 வார காலங்களுக்கு ஆரம்பகட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தினசரி வழிகாட்டுதல் வழங்கவும், ஐடியாக்களை கூர்மைப்படுத்தவும், இலக்கு சந்தையை வரையறுக்கவும், தயாரிப்பு / தொழில்நுட்பம் குறித்த சந்தைக் கருத்துக்களைப் பெறவும், நிறுவனத்தை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான மைல்கற்களை உருவாக்கவும் 'நெக்சஸ்' உறுதுணையாக புரிகிறது. இந்த நவீன கூட்டமைப்பில் தொடக்க முயற்சிகளில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் தொழில்முனைவோரிடையே மனம் சார்ந்த ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்படுகிறது.
மேம்பட்ட பயிற்சி
ஆரம்ப 9 வார பயிற்சிக்கு பிறகு, 15 நிறுவனங்களில் இருந்து 3-4 சிறந்த நிறுவனங்கள் நீண்ட, ஆழமான பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் கூடுதலாக 8 மாதங்கள் வரை இன்குபேட்டர் வசதிகள் மற்றும் நெட்வொர்க்கை முழுமையாகயாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில், தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கும், வாடிக்கையாளர் மற்றும் வருவாய்த் தளத்தை அதிகரிப்பதற்கும், செயல்பாடுகள் மற்றும் சந்தை வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இணைந்து பணியாற்றும்.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் https://startupnexus.in/useraccess/sign-in.aspx எனும் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 5, 2025
முடிவு அறிவிக்கப்படும் நாள்:
ஆரம்ப கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த தகவல் ஜனவரி 17, 2025க்குள் தெரிவிக்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
www.startupnexus.in