தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விலங்குகளின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கான படிப்பு

விலங்குகளின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கான படிப்பு

விலங்குகளின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கான படிப்பு


ஆக 19, 2013 12:00 AM

ஆக 19, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 19, 2013 12:00 AM ஆக 19, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு விலங்கு, ஆரோக்கியமான முறையில் நன்றாக வளர்வதற்கான உணவளித்தல் செயல்முறை பற்றி படிப்பதுதான் விலங்குகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து (அனிமல் நியூட்ரிஷன்) முதுநிலை படிப்பாகும். ஊட்டச்சத்து வகைப்பாடு மற்றும் அதன் செயல்பாடு, கால்நடைகளுக்கான உணவு பற்றிய விவரணம், பற்றாக்குறை அறிகுறிகள், செரிமான செயல்பாடு மற்றும் வீட்டு விலங்குகளுக்கான உணவுமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

இப்படிப்பிற்கான இடங்கள்

கர்னாலிலுள்ள NDRI -ல், இப்படிப்பிற்கு 11 இடங்களே உள்ளன. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கான லாலா லஜ்பத் ராய் பல்கலையில் 5 இடங்கள் உள்ளன. இம்பாலிலுள்ள மத்திய வேளாண் பல்கலையில் வெறும் 2 இடங்களே உள்ளன.

இந்தியாவில் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. இத்துறை நிபுணர்கள் அதிகமாக இருந்தால்தான், கால்நடைகளை சிறப்பாக பராமரிக்க முடியும். எனவே, இப்படிப்புக்கான இடங்களை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

சேர்க்கை விபரங்கள்

முதுநிலை விலங்குகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து படிப்பில் சேர, இளநிலை வெட்டரினரி அல்லது வேளாண் அறிவியல் படிப்பில் (அப்படிப்பில் கால்நடை பராமரிப்பு தொடர்பான பாடங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். SC/ST/PH பிரிவு மாணவர்களுக்கு 50% போதுமானது.

மேலும், முதுநிலைப் படிப்பிற்கு பதிவு செய்வதற்கு முன்பாக, இளநிலைப் படிப்பில் இன்டர்ன்ஷிப் கட்டாயம் செய்திருக்க வேண்டும். வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வின் வழியாக, இடஒதுக்கீடு மற்றும் மெரிட் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.

பொதுவாக, இப்படிப்பிற்கான விண்ணப்ப செயல்பாடுகள், டிசம்பர் கடைசி வாரத்தில் துவங்கி, பிப்ரவரி நடுப்பகுதியில் முடிந்துவிடுகிறது.

உதவித்தொகை விபரங்கள்

இப்படிப்பை மேற்கொள்ள வழங்கப்படும் உதவித்தொகை திட்டங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். AIEEA - PG தேர்வின் கீழ், முதுநிலைப் படிப்பிற்கு, ICAR Junior Research உதவித்தொகைகள் 475ம் , 20 மேஜர் பாடப் பிரிவுகளில், ICAR - Deemed universities உட்பட, அனைத்து இணைக்கப்பட்ட பல்கலைகளிலும், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

பணி வாய்ப்புகள்

இப்படிப்பை பொறுத்தவரை வேலைக்கு பஞ்சமில்லை. முட்டைகளை செயற்கை முறையில் அடைகாக்கும் மையங்கள், கோழிப் பண்ணைகள், விலங்கு உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

Animal caretaker, Animal Nutritionist, Pet Nutritionist or Animal Nutrition sales representative போன்ற பலநிலைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், பல பொதுத்துறை கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us