/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இந்த துறைகளை தேர்வு செய்வதற்கு முன்னதாக...
/
இந்த துறைகளை தேர்வு செய்வதற்கு முன்னதாக...
ஜூன் 18, 2014 12:00 AM
ஜூன் 18, 2014 12:00 AM
உங்களின் வாழ்வில் நீங்கள் படித்து முடித்து, புதிதாக பணிக்கு செல்லலாம் அல்லது ஏற்கனவே பணியில் இருந்து, அதிலிருந்து வேறு துறை பணிக்கு மாற நினைக்கலாம். ஏற்கனவே இருக்கும் பணி பிடிக்காமல் போதல் அல்லது பெரிய வளர்ச்சியை எதிர்பார்த்தல் ஆகிய காரணங்களால், ஒருவரின் பணிமாறுதல் நிகழலாம்.
எது எப்படியிருந்தாலும், ஒரு பணியை தேர்வு செய்யும்போது, அந்தப் பணியின் தன்மை மற்றும் அதற்கான எதிர்காலம் ஆகியவை குறித்து தெளிவான சிந்தனை இல்லாமல், அதில் காலடி எடுத்து வைக்கக்கூடாது. அப்பணிகள் குறைந்த சம்பளம் கொண்டதாகவும், எதிர்காலம் இல்லாததாயும் இருக்கலாம்.
சில பணிகளுக்கு, குறைந்த தகுதிநிலை இருந்தாலே போதுமானதாக இருக்கலாம். ஆனால், அதில் சம்பளம் குறைவாக இருக்கும் மற்றும் உங்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கலாம்.
எனவே, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பணிகள் குறித்து இக்கட்டுரை அலசுகிறது.
Tele - Calling
மொபைல் பேங்கிங் மற்றும் இணையதள பேங்கிங் ஆகியவற்றின் அறிமுகத்தால், Tele - Calling என்பது வேகமான அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. Tele - Calling பணியானது, பணியை எளிதாக்கும் வேறு பல அம்சங்களின் மூலம் மறைந்து வருகிறது.
மேற்கண்ட அம்சங்களைவிட, Tele - Calling தொழில்துறை மறைந்து வருவதற்கு, இன்னொரு முக்கிய அம்சமும் உண்டு. அத்துறையில், தொடர்ச்சியாக மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுவே, அத்துறையின் அழிவுக்கு பிரதான காரணம்.
பேஷன் டிசைனர்
பேஷன் டிசைனிங் என்பது தொடர்ச்சியாக வளர்ந்துவரும் ஒரு துறை என்பதால், அத்துறையை தேர்வு செய்தால், வேலை வாய்ப்பிற்கு பஞ்சமே இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அத்துறையை நோக்கி, ஏராளமானவர்கள் படையெடுப்பதால், தரத்திற்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.
நிர்வாகப் பணி
இது மேல்நிலை நிர்வாகப் பணிகள் தொடர்பானதல்ல. கிளர்க் நிலையிலான பணி வகைகளைச் சார்ந்தது. தரவுகளை உள்ளிடுவது() மற்றும் கோப்புகளை சரிசெய்து பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஒருகாலத்தில் முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நாளில், இணையத்தின் மூலமாக தரவுகளைப் பெறுவது எளிதாகிப் போனதால், கிளர்க்குகள் அல்லது அலுவலக பணியாளர்களின் தேவைகள், தேவையில்லாமல் போய்விட்டன.
Voice Mails போன்ற தொழில்நுட்பங்கள் போன்றவை, பல வகையான அலுவலகப் பணிகளை செய்வதற்கு, ஏதுவாக இருப்பதால், பல அலுவலகப் பணியாளர்களுக்கான தேவைகள் இல்லாமல் போய்விட்டன.
Craft and Fine Arts
கவின்கலை மற்றும் கைவினைப்பொருள் துறையில் நீங்கள் நுழைய விரும்பினால், அதில் சவால்கள் அதிகம் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தற்போதைய நிலையில், அத்துறையில் நூற்றுக்கணக்கான திறன்வாய்ந்த கலைஞர்கள் ஈடுட்பட்டுள்ளார்கள். நீங்கள் அவர்களின் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும், ஒரு கேலரியில் உங்களின் படைப்பிற்கான இடத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத அல்லது உங்களது படைப்பின் அருமை தெரியாத கேலரி உரிமையாளர்களிடம் நீங்கள் வேண்டி கேட்டுக்கொண்டு, அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே, இத்துறையில் நுழைவதற்கு முன்பாக நன்கு யோசித்து முடிவெடுக்கவும்.
அஞ்சல் பணியாளர்கள்
மொபைல் போன்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவை, இன்றைய நிலையில் மனிதனின் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள். மேலும், அவை ஆதாரமாக காட்டக்கூடிய வகையிலான தகவல்தொடர்பு அம்சங்களாகவும் உள்ளன.
எனவே, கொரியர் சேவை உள்ளிட்ட அஞ்சல் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, பெரிய எதிர்காலம் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். மனிதர்கள் நேரடியாக சென்று தபால்களை சேர்ப்பிக்கும் பணி, அடுத்துவரும் நாட்களில் முற்றிலும் இல்லாமலேயே போகலாம். எனவே, இத்துறையில், ஈடுபட அல்லது தொழில்தொடங்க நினைப்பவர்கள் நன்கு யோசித்துக் கொள்வது சிறப்பு.
மேற்கண்ட துறைகள், உங்களின் சிந்தனைக்கான சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்று, இன்னும் பல துறைகள் இருக்கின்றன. எனவே, நீங்கள் தேர்வு செய்யும் துறையானது, பெரிய ஏற்றத்தை சந்திக்காத துறையாக இருந்தாலும் பரவாயில்லை. இறக்கத்தை சந்திக்காத துறையாக இருக்கட்டும். எப்போதுமே, சீராக ஓடிக்கொண்டிருக்கும் அல்லது எங்கு சென்றாலும் பணி வாய்ப்பு உண்டு என்ற வகையிலான துறையாக இருக்கட்டும். அப்போது, உங்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு நிச்சயம்.

