sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மாற்றம் உருவாக்கும் கெமிக்கல் இன்ஜினியரிங்

/

மாற்றம் உருவாக்கும் கெமிக்கல் இன்ஜினியரிங்

மாற்றம் உருவாக்கும் கெமிக்கல் இன்ஜினியரிங்

மாற்றம் உருவாக்கும் கெமிக்கல் இன்ஜினியரிங்


நவ 16, 2013 12:00 AM

நவ 16, 2013 12:00 AM

Google News

நவ 16, 2013 12:00 AM நவ 16, 2013 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

20ம் நூற்றாண்டின் பெரும் மாற்றங்களிலும், மாற்றங்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையாக ரசாயனத்தினால் விளைந்த வினை பொருட்கள் உள்ளடக்கமாக இருந்தது.

அறிவியல் வளர்ச்சியின் முக்கிய மூல காரணியான மூலப் பொருட்களின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்படும் அத்தனை பொருட்களும் ரசாயனம் சார்ந்ததாகவே இருக்கிறது.
 
தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கெமிக்கல்கள் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை கெடாமல் வைப்பதற்கும், உணவுப் பொருட்களின் சுவை கூட்டுவதற்கும், உணவுப் பொருட்களை பாதுகாக்கும் பொருள் என எங்கும் நீக்கம் அற அனைத்துவித உபயோகங்களிலும் கெமிக்கலின் பயன்பாடு முக்கிய அம்சமாக விளங்குகிறது.
 
மனித வாழ்க்கையோடு கலந்த கெமிக்கல்கள் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கெமிக்கலின் பயன்பாட்டை மனித குலத்திற்கு பயன் தரும் பொருட்களை உருவாக்கும் பெரிய பொறுப்பில் உங்களை செலுத்த விரும்புகிறீர்களா?  அப்படியெனில் தயங்காமல் தேர்ந்தெடுங்கள் கெமிக்கல் இன்ஜினியரிங்கை. 
 
கல்வித் தகுதி
 
இளநிலை பொறியியலில்  கெமிக்கல் இன்ஜினியரிங்.
 
அல்லது பத்தாம் வகுப்பிற்கு பின்னர் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு நேரடியாக 2 ஆம் ஆண்டு பொறியியலில் சேரலாம்.
 
முதுநிலை பொறியியலில் கெமிக்கல் இன்ஜினியரிங்.
 
வேலை வாய்ப்புகள்
 
ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளில் அதிகமான தேவைப்பாடு உள்ளது. காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள், துணி தயாரிக்கும் கூடங்கள், மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் துறை, உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள், வாசனை திரவியங்கள் தயாரிப்பு நிறுவனம் போன்ற இடங்களிலும் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி கூடங்கள் மற்றும் இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையங்கள் போன்றிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
 
வெளிநாடுகளில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. குறிப்பாக அரபு நாடுகள், சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் கெமிக்கல் இன்ஜினியர்களின் தேவை அதிக அளவில் இருக்கிறது.
 
வளர்த்துக்கொள்ளவேண்டிய திறன்கள்

  • சொந்த ஊரில் வேலை கிடைப்பது அரிது, ஆகையால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வேலை பார்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
  • ரசாயனங்களோடு பணிபுரிவதால் உடல் நலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பவராக இருக்க வேண்டும்.
  • தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால் தான் முன்னேற்றம் எளிதாக கிடைக்கும்.

சிறந்த கல்வி நிறுவனங்களில் சில
 
ஐ.ஐ.டி. (மும்பை, டில்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கே, சென்னை)
பிட்ஸ் பிலானி.
மும்பை யூனிவர்சிட்டி இன்ஸ்டிடீயூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி.
இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூர்.
நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர்.






      Dinamalar
      Follow us