மார் 10, 2025 12:00 AM
மார் 10, 2025 12:00 AM

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 1968ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் உதவியுடன் இந்திய அரசாங்கத்தால் சென்னையில் 'சிபெட்' நிறுவப்பட்டது.
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி என அழைக்கப்பட்ட வந்த நிலையில் சில அண்டுகளுக்கு முன்பு, 'சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி' என்று பெயர் மாற்றப்பட்டது. அரசு ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மையான கல்வி நிறுவனமாக 'சிபெட்' விளங்குகிறது.
வளாகங்கள்:
சென்னை, புபனேஸ்வர், லக்னோ, அகமதாபாத், கொச்சி, பெங்களூரு, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், பாட்னா மற்றும் ஹரியானா.
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.இ., / பி.டெக்., - பிளாஸ்டிக் டெக்னாலஜி / டெக்னாலஜி
பி.இ., / பி.டெக்., - மானுபாக்சரிங் இன்ஜினியரிங் / டெக்னாலஜி
பி.டெக்.,- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பி.டெக்., - பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங்
படிப்பு காலம்:
4 ஆண்டுகள்
தகுதி:
12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாக கொண்டு, குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை வளாகத்தில் சேர்க்கை பெற, ஓரளவு சிறந்த மதிப்பெண் பெற்றிருக்கும்பட்சத்தில் மட்டுமே, தமிழக அரசின் சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் டி.என்.இ.ஏ., கலந்தாய்வின் வாயிலாக தேர்வு செய்ய முடியும்.
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.இ., / எம்.டெக்., - பிளாஸ்டிக் டெக்னாலஜி / டெக்னாலஜி
எம்.டெக்., - பாலிமர் நானோ டெக்னாலஜி
எம்.இ., - கேட் / கேம்
எம்.எஸ்சி., டெக்., - மெட்டீரியல் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்
எம்.எஸ்சி.,- பயோ பாலிமர் சயின்ஸ்
எம்.எஸ்சி., - பாலிமர் சயின்ஸ்
எம்.எஸ்சி., - அப்ளைடு பாலிமர் சயின்ஸ்
படிப்பு காலம்:
2 ஆண்டுகள்
டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி
டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி
போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டிசைன்
முதுநிலை டிப்ளமா இன் பிளாஸ்டிக்ஸ் புராசெசிங் அண்டு டெஸ்டிங்
இவைதவிர பிஎச்.டி., மற்றும் குறுகியகால படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு:
www.cipet.gov.in