தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சிறந்த சட்டப் படிப்பிற்கும், சிறந்த வேலைக்கும் ‘கிளாட்’!

சிறந்த சட்டப் படிப்பிற்கும், சிறந்த வேலைக்கும் ‘கிளாட்’!

சிறந்த சட்டப் படிப்பிற்கும், சிறந்த வேலைக்கும் ‘கிளாட்’!


ஜன 23, 2016 12:00 AM

ஜன 23, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 23, 2016 12:00 AM ஜன 23, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘இந்திய சட்டத் துறையில் வல்லுனராக வேண்டும்’, என்று விரும்பும் மாணவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய நுழைவுத் தேர்வே ’காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ எனப்படும் ’கிளாட்’!

திருச்சியில் உள்ள, தமிழ்நாடு தேசிய சட்டக் கல்லூரி உள்பட நாடு முழுவதும் செயல்படும், 16 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய சட்டக் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்பில் சேர்வதற்கு, இந்த நுழைவுத் தேர்வை எழுதுவது மிகவும் அவசியம். இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களும், இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்குகின்றன.

அங்கீகரிக்கும் பிரபல கல்வி நிறுவனங்கள்:

நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி (பெங்களூரு), நல்சார் பல்கலைக்கழகம் (ஹைதராபாத்), நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி (போபால்), வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுரிடிக்கல் சயின்சஸ் (கொல்கத்தா), நேஷனல் லா யுனிவர்சிட்டி (ஜோத்பூர்), ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி (ராய்புர்), குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி (காந்திநகர்), டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (லக்னோ), ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா (பஞ்சாப்), சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (பாட்னா), நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ் (கொச்சி), நேஷனல் லா யுனிவர்சிட்டி ஓடிசா (கட்டாக்), நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா (ராஞ்சி), நேஷனல் லா யுனிவர்சிட்டி அன்ட் ஜுடிசியல் அகாடமி (அசாம்), தாமோதரம் சஞ்சிவயா நேஷனல் லா யுனிவர்சிட்டி (விசாகப்பட்டிணம்), தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல் (திருச்சி) மற்றும் மகாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி (மும்பை).

இவைதவிர, பல தனியார் கல்வி நிறுவனங்களும் ‘கிளாட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

படிப்புகள்

இளநிலை: ஐந்து ஆண்டு, ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் பி.ஏ.எல்.எல்.பி., பி.எஸ்சி.எல்.எல்.பி., மற்றும் பி.காம்.எல்.எல்.பி.,

தகுதிகள்: பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதுமானது. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும், மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு பகுதிகள்: ஆங்கில மொழி அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (லீகில் ஆப்டிடியூட்) மற்றும் பகுத்தாராயும் திறன் (லாஜிக்கல் ரீசனிங்) ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

முதுகலை பாடப் பிரிவு: எல்.எல்.எம்.,

தகுதிகள்: 55 சதவீத தேர்ச்சியுடன் எல்.எல்.பி., அல்லது ஏதேனும் ஒரு சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

தேர்வு பகுதிகள்: அரசியலமைப்பு சட்டம், சட்டவியல் மற்றும் குற்றச்செயல்கள், குற்றவியல் சட்டம், சர்வதேச சட்டம் போன்ற பாடப் பகுதிகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நாள்: மே 8, 2016

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் www.clat.ac.in என்ற இணயதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31, 2016.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us