/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வாய்ப்புகள் மிகுந்த வணிகவியல் படிப்புகள்
/
வாய்ப்புகள் மிகுந்த வணிகவியல் படிப்புகள்
ஜன 04, 2025 12:00 AM
ஜன 04, 2025 12:00 AM

பள்ளி மேல்நிலை வகுப்புகளில் வணிகவியல் பிரிவை தேர்வு
செய்த மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்புகளில் சுவாரஸ்யமான மற்றும்
திறன் சார்ந்த வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
பி.காம்.,
இப்படிப்பில்
வணிகவியல் பற்றி ஆழமாக கற்றுத்தரப்படுகிறது. கல்வி நிறுவனங்களில்
நேரடியாகவும், தொலைநிலை படிப்பாகவும் படிக்கலாம். பி.காம்., பட்டம்
பெற்றவர்கள் வங்கி, வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகளை பெற
முடியும். சி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., போன்றை படிப்புகளையும் தொடரலாம்.
பி.பி.ஏ.,
இப்படிப்பை
வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள் முதுநிலையில் எம்.பி.ஏ., படிப்பை
தொடரலாம். தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவைப் பொருத்து ஓராண்டு முதல் இரண்டு
ஆண்டுகள் வரை பயிற்றுவிக்கப்படுகிறது. சொந்த தொழில் தொடங்குவதோடு, முன்னணி
நிறுவனங்களில் பணி புரியும் வாய்ப்பும் உண்டு.
பி.ஏ.,-எகனாமிக்ஸ்
பொருளாதாரத்தை
அலசி ஆராயும் ஒரு படிப்பு பி.ஏ., -எகனாமிக்ஸ். இப்பட்டப்படிப்பை
முடிக்கும் பட்டதாரிகள் எம்.ஏ.,- எக்னாமிக்ஸ், எம்.பி.ஏ., போன்ற
மேற்படிப்புகளை தொடரலாம். சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதலாம். திறன்களை
வளர்த்துக்கொள்பவர்களால் பொருளாதார நிபுணராகவும் வளம்வர முடியும்.
தொழில்முறை படிப்புகள்:
சி.ஏ.,
சார்டட்
அக்கவுண்டண்ட் படிப்பு படிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது
அவசியம். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சி.ஏ., படிப்பின் நிலை-1ல்
சேரலாம். பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் சி.ஏ., நிலை-2ல் நேரடியாக
சேர முடியும். வெற்றிகரமாக சி.ஏ., நிறைவு செய்பவர்களுக்கு அரசு
நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு வணிகம் தொடர்பான வேலை
வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
சி.எம்.ஏ.,
காஸ்ட்
அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி படிப்பு 4 ஆண்டுகள் வரை கொண்டது.
இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் நேரடியாக 2ம் நிலையில் சேரலாம். பொருளாதார
ஆலோசகர், நிதி கட்டுப்பாட்டாளர், செலவு கட்டுப்பாட்டாளர், கணக்காளர்
உள்ளிட்ட ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
சி.எஸ்.,
கம்பெனி
செக்கரட்டரி படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்திருப்பது அவசியம்.
இப்படிப்பிற்கான கால அளவு 3 ஆண்டுகள். கார்ப்பரேட் பிளானர், ஆலோசகர்,
ஸ்ட்ராடிஜிக் பிளானர் என பல்வேறு வகையான வேலை வாய்புகள் காத்திருக்கிறது.
இவை
தவிர, சி.எப்.ஏ., ஏ.சி.சி.ஏ., சி.பி.ஏ., சி.ஐ.ஏ., போன்ற பல்வேறு வகையான
வாய்ப்புகள் வணிகவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு உள்ளன. வெளிநாடுகளுக்கு
சென்றும் வணிகவியல் சார்ந்த படிப்புகளை தொடர முடியும்.