தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காமன்வெல்த் உதவித்தொகை 2025

காமன்வெல்த் உதவித்தொகை 2025

காமன்வெல்த் உதவித்தொகை 2025


செப் 14, 2024 12:00 AM

செப் 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 14, 2024 12:00 AM செப் 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யு.கே., வில் முழுநேர முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவ, மாணவிகள் 'காமன்வெல்த் மாஸ்டர்ஸ்' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

யு.கே.,வின் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கம் இந்த உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக, செப்டம்பர் / அக்டோபர் 2025ல் துவங்கப்படும் படிப்புகளில் சேர்க்கை பெறமுடியும்

தலைப்புகள்:

* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
* சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்
* உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல்
* உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்
* பின்னடைவை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளுக்கு பதிலளிப்பது
* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்பு

தகுதிகள்:

* இந்திய குடிமகனாகவும், இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் அவசியம்.

* செப்டம்பர் 2025 நிலவரப்படி, குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும் அல்லது குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும்.

* வயதுவரம்பு ஏதும் இல்லை.

* உதவித்தொகை பெறாமல் யு.கே.,வில் படிக்க இயலாத வகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவராக இருத்தல் வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4.5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் ஆசியம்.

* பொதுவக, ஏற்கனவே முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு காமன்வெல்த் கமிஷன் உதவித்தொகை வழங்குவதில்லை என்றபோதிலும், மாணவர்கள் வழங்கும் உரிய காரணத்தின் அடிப்படையில் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு.

* யு.கே.,வில் வழங்கப்படும் ஓர் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பிற்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எம்.பி.ஏ., படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
மத்திய கல்வி அமைச்சகத்தின் சக்ஷத் போர்ட்டல் மற்றும் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றின் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

அக்டோபர் 15

விபரங்களுக்கு:
www.education.gov.in மற்றும் https://cscuk.fcdo.gov.uk/scholarships-filter-search/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us