தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டேட்டா சயின்டிஸ்ட்

டேட்டா சயின்டிஸ்ட்

டேட்டா சயின்டிஸ்ட்


பிப் 19, 2026 11:52 AM

பிப் 19, 2026 11:52 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 19, 2026 11:52 AM பிப் 19, 2026 11:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்கள் மிக முக்கியமான அங்கமாகிவிட்டன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதற்கும் 'டேட்டா'வை சார்ந்துள்ளன. இந்தத் துறையில் மிக முக்கியப் பங்கு வகிப்பவரே, 'டேட்டா சயின்டிஸ்ட்'.

டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் நிறுவனங்களில் கிடைக்கும் பெரும் அளவிலான தகவல்களை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து பயனுள்ள முடிவுகளைக் கண்டறிபவர். வெறும் எண்களாகவும், புள்ளிவிவரங்களாகவும் இருப்பதை ஒரு கதையைப் போல மாற்றிக் கூறுவது இவர்களின் பணி.

நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டுவதை முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மெஷின் லேர்னிங் போன்ற நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் சந்தையின் போக்கு மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கின்றனர்.

மேலும், வியாபார ரீதியாகத் தோன்றும் சிக்கலான சவால்களுக்குத் தரவு சார்ந்த துல்லியமான தீர்வுகளை வழங்குவதன் வாயிலாக, ஒரு நிறுவனம் சரியான முடிவுகளை எடுக்க இவர்கள் முதுகெலும்பாகச் செயல்படுகின்றனர்.

படிப்பு

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் டேட்டா சயின்ஸ் துறையில் நுழைய, முதலில் கணிதம் மற்றும் புள்ளிவிவரம் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்வது சிறந்தது. மேலும், பட்டப்படிப்புடன் சேர்த்து பைத்தான் (Python), ஆர் (R), மற்றும் எஸ்.கியூ.எல்., (SQL) போன்ற புரோகிராமிங் மொழிகளையும், Tableau போன்ற டேட்டா விஷுவலைசேஷன் கருவிகளையும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அல்லது 'பூட்கேம்ப்'கள் மூலம் கற்றுக்கொள்வது கூடுதல் பலம் சேர்க்கும்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் டேட்டா சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்புகள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 2030ம் ஆண்டிற்குள் இத்துறையில் சுமார் 54 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், சுகாதாரத் துறை, இ-காமர்ஸ் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் இவர்களுக்கு அதிக தேவை உள்ளது.

மாணவர்கள் வெறும் பாரம்பரியப் படிப்புகளோடு நின்றுவிடாமல், இது போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துவது அவசியம். சரியான திறன்களை வளர்த்துக் கொண்டு, ஆர்வத்துடன் செயல்பட்டால், ஒரு மிகச்சிறந்த டேட்டா சயின்டிஸ்ட்டாக உருவெடுத்து உலகிற்குப் புதிய தீர்வுகளை வழங்க முடியும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us