தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்


ஆக 28, 2026 10:46 AM

ஆக 28, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 28, 2026 10:46 AM ஆக 28, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' என்பது ஒரு சாதாரண வேலையாக இல்லாமல், பெரும் வளர்ச்சி தரும் ஒரு துறையாக உருவெடுத்துள்ளது.

இணையம் மற்றும் மொபைல், கணினி மூலம் பொருட்களை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவதே டிஜிட்டல் மார்க்கெட்டிங். இதில் சமூக ஊடகங்கள், கூகுள், இ-மெயில் மற்றும் இணையதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனினும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது வெறும் விளம்பரம் மட்டுமல்ல; அது நவீன காலத்தின் தவிர்க்க முடியாத வணிகத் தேவை. சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் ஆன்லைனுக்கு மாறிவிட்டன. இதனால் திறமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

கற்பனைத் திறன் அதிகமாக இருந்தால் விளம்பரங்கள் உருவாக்கலாம். அதே சமயம் தரவுகளை ஆராய விருப்பம் என்றால் எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் வணிகத்தை வளர்க்கலாம். இந்தத் துறையில் இவை இரண்டிற்கும் இடமுண்டு.

வேலை வாய்ப்புகள்


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு கடல் போன்றது. இதில் உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப பல்வேறு சிறப்பான பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, எஸ்.இ.ஓ., மூலம் கூகுள் போன்ற தேடுபொறிகளில் ஒரு இணையதளத்தை முன்னிலைப்படுத்த முடியும்.

அதே போல், சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாயிலாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களை பயன்படுத்தி பொருட்களை விளம்பரப்படுத்தலாம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பயனுள்ள கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதை 'கன்டென்ட் மார்க்கெட்டிங்' என்கிறோம்.

இ-மெயில் மார்க்கெட்டிங் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்பி அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். இவ்வாறு பல கிளைகளைக் கொண்ட இத்துறை, ஒருவருக்குத் தகுந்த வேலை வாய்ப்பை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.

இந்தத் துறையின் மிகப்பெரிய வசதி என்னவென்றால், ஒரு லேப்டாப் மற்றும் இணையம் இருந்தால் போதும், நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது உலகின் எந்த மூலையிலிருந்தோ வேலை செய்யலாம்.

தேவைப்படும் திறன்கள்


டிஜிட்டல் உலகம் தினமும் மாறிக்கொண்டே இருக்கும் சூழலில், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வேண்டும். இதைத் தொடர்ந்து, அடிப்படை கணினி அறிவு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஒரு கருத்தை சரியாகக் கொண்டு சேர்க்கும் திறன் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us