தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இ.சி.இ., - மின்னணு கனவுகளை மெய்ப்பிக்கும் கல்வி!

இ.சி.இ., - மின்னணு கனவுகளை மெய்ப்பிக்கும் கல்வி!

இ.சி.இ., - மின்னணு கனவுகளை மெய்ப்பிக்கும் கல்வி!


ஆக 23, 2026 05:01 PM

ஆக 23, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ஆக 23, 2026 05:01 PM ஆக 23, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் இன்று உலகை இயக்கும் முக்கிய சக்திகளாக உள்ளன. இந்த இரண்டு துறைகளையும் ஒரே பாதையில் இணைக்கும் படிப்புதான் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பு.

இ.சி.இ., படிப்புகள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் மாணவர்களுக்கு திறனை அளிக்கின்றன. இது மென்பொருள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய மூன்றிலும் வாய்ப்பு தரும் வலிமையான படிப்பாக உள்ளது. இதில் மாணவர்கள் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு, ஒலி-ஒளி பரிமாற்றம், எம்பெடெட் சிஸ்டம்கள், வி,எல்.எஸ்.ஐ., ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்கிறார்கள்.

தகுதி


இளநிலை பட்டப்படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்


கோர் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, எம்பெடட் அமைப்புகள், மென்பொருள் மேம்பாடு, ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோ, பெல், டி.ஆர்.டி.ஓ., போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us