தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சுற்றுச்சூழல் பொறியியல்

சுற்றுச்சூழல் பொறியியல்

சுற்றுச்சூழல் பொறியியல்


ஆக 11, 2026 04:27 PM

ஆக 11, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

ஆக 11, 2026 04:27 PM ஆக 11, 2026 04:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழல் மாசுபாடு, நீர் மற்றும் காற்று நச்சுநிலை, திடக்கழிவுகள் சேர்ப்பு ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இயற்கையின் பாதுகாப்பிற்கும் மனித வாழ்வின் தரத்திற்கும் இடையே பாலமாக அமையும் துறை தான் சுற்றுச்சூழல் பொறியியல். சமூக நலனையும், நீடித்த வளர்ச்சியையும் அடைவதற்கான அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்பாக இது திகழ்கிறது.

படிப்புகள்


சுற்றுச்சூழல் பொறியியலில் இளநிலை படிப்பாக பி.இ.,/பி.டெக்., ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். இந்த 4 ஆண்டு படிப்பில், நீர்நீராக்கம், காற்று மாசுபாடு கட்டுப்பாடு, மாசுக்கழிவு மேலாண்மை போன்றவை பயிலப்படுகிறது. பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ள பாடப்பிரிவை முடித்த மாணவர்கள் இதில் சேர தகுதிப் பெறுகிறார்கள்.

முதுநிலை கல்வியாக எம்.இ.,/எம்.டெக்., சுற்றுச்சூழல் பொறியியலைத் தேர்வு செய்யலாம். இப்பாடத்தில் பசுமை தொழில்நுட்பம், மேம்பட்ட சிகிச்சை முறைகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு போன்ற மேம்பட்ட பகுதிகள் கற்பிக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்


அரசு மற்றும் தனியார் துறைகளில் பரந்தவையாக உள்ளன. மாசுப்பாடு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகங்கள், நீர்வளத்துறை, ஆலோசனை நிறுவனங்கள், கட்டுமான துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையங்கள் போன்றவற்றில் சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு இடமுண்டு. சுற்றுச்சூழல் பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி, கழிவுநீர் நிபுணர் போன்ற பதவிகளில் பணியாற்றலாம்.

எதிர்கால வளர்ச்சி


காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும், பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இந்தத் துறையின் பங்கு அபரிமிதமாக உள்ளது. நிலைத்த வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் உலகம், சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us