/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆய்வோம் அறிவோம்: சுற்றுச்சூழல் அறிவியல்
/
ஆய்வோம் அறிவோம்: சுற்றுச்சூழல் அறிவியல்
நவ 04, 2014 12:00 AM
நவ 04, 2014 12:00 AM
சுற்றுச்சூழலின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) துறை, சமீபகாலமாக சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால் உலகமே சந்தித்து வரும் பாதிப்புகளை, அனைத்து தரப்பினரும் உணரத் தொடங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உயிரினங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது இத்துறை படிப்பு. இயற்பியல், வேதியியல், உயிரியல், மண் அறிவியல், புவி அறிவியல், புவியியல் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது இதன் சிறப்பம்சம்.
வாய்ப்புகள் எப்படி?சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருவதால், இத்துறையில் நிபுணர்களுக்கான தேவை கூடி வருகிறது. இத்துறை நிபுணர்கள், மனிதர்களின் பல்வேறு தவறான செயல்களால், சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து, அவற்றிற்கு உரிய தீர்வுகளை முன்வைப்பார்கள்.
பட்டப்படிப்பாக, சுற்றுச்சூழல் அறிவியல் படித்தவர்களுக்கு, Environmental Consultant ஆக செயல்பட முடியும். மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பணி வாய்ப்பினை பெறலாம்.
இதுதவிர, டெக்ஸ்டைல் மில், சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் நிலை குறித்து மேற்பார்வையிடும் பணியையும் பெறலாம். பொதுவாக சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல என்.ஜி.ஓ.,க்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துபவர்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இத்துறையில், பணித் திருப்தியுடன் இந்த உலகிற்கும் நன்மை செய்கிறோம் என்ற மனத் திருப்தியும் நிச்சயம் கிடைக்கும்.
எங்கு படிக்கலாம்?
இத்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் சில...
புதுச்சேரி பல்கலை - புதுச்சேரி
பாரதியார் பல்கலை - கோவை
மைசூர் பல்கலை - மைசூர்
ஐ.ஐ.எஸ்சி., - பெங்களூர்
பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி - மும்பை
ஆந்திரா பல்கலை - விசாகப்பட்டணம்
ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்
ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலை - குண்டூர்
பனாரஸ் இந்து பல்கலை - வாரணாசி
பெங்களூர் பல்கலை - பெங்களூர்
ஜாமியா மிலியா இஸ்லாமியா - டில்லி
ஜவஹர்லால் நேரு பல்கலை - டில்லி
கண்ணூர் பல்கலை - கேரளா
ஒஸ்மானியா பல்கலை - ஐதராபாத்

