/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
முக்கிய வணிகப் பள்ளிகளில் கட்டணம் மற்றும் சேர்வது எப்படி?
/
முக்கிய வணிகப் பள்ளிகளில் கட்டணம் மற்றும் சேர்வது எப்படி?
முக்கிய வணிகப் பள்ளிகளில் கட்டணம் மற்றும் சேர்வது எப்படி?
முக்கிய வணிகப் பள்ளிகளில் கட்டணம் மற்றும் சேர்வது எப்படி?
டிச 04, 2013 12:00 AM
டிச 04, 2013 12:00 AM
சாதாரணமாக ஒரு கலைப் படிப்பை மேற்கொள்வதைவிட, எம்.பி.ஏ., படிப்பதற்கு செலவு கூடுதல் என்பது பலரும் அறிந்ததே. அப்படிப்பிற்கான கட்டணம், கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்களில் மிக அதிகமாகவும், சில கல்வி நிறுவனங்களில் சமாளிக்கும் வகையிலும் வசூலிக்கப்படுகிறது.
ஆனாலும், இந்தியாவின் பிரதான மேலாண்மை கல்வி நிறுவனங்களில்(ஒரு சில கல்வியகங்கள் தவிர), MBA படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம், கீழ் நடுத்தர வர்க்க மக்களால் சமாளிக்க முடியாததாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, பல முக்கிய மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 2 வருட மேலாண்மை படிப்பிற்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக்கொண்டால் நன்மை பயக்கும்.
2013-15ம் கல்வியாண்டின்படி, கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வி நிறுவன பெயர் |
கட்டணம் |
ஐ.ஐ.எம்., அகமதாபாத் |
ரூ.16 லட்சம் |
ஐ.ஐ.எம்., பெங்களூர் |
ரூ.17 லட்சம் |
ஐ.ஐ.எம்., லக்னோ |
ரூ.10.8 லட்சம் |
ஐ.ஐ.எம்., இந்தூர் |
ரூ.13 லட்சம் |
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு |
ரூ.9.75 லட்சம் |
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர் |
ரூ.14.75 லட்சம் |
எம்.டி.ஐ., குர்கோன் |
ரூ.15 லட்சம் |
மேலாண்மைத் துறை, டெல்லி பல்கலை |
ரூ.21,000 ஆயிரம் |
எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர்., மும்பை |
ரூ.11.5 லட்சம் |
ஐ.ஐ.எப்.டி., டெல்லி |
ரூ.12.75 லட்சம் |
எஸ்.ஐ.எம்.ஸ்ரீ., மும்பை |
ரூ.1.3 லட்சம் |
ஐ.ஐ.எம்., ஷில்லாங் |
ரூ.8 லட்சம் |
ஐ.ஐ.எம்., ராஞ்சி |
ரூ.9 லட்சம் |
ஐ.ஐ.எம்., ரோடாக் |
ரூ.9 லட்சம் |
ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் |
ரூ.9.6 லட்சம் |
ஐ.ஐ.எம்., திருச்சி |
ரூ.10 லட்சம் |
ஐ.ஐ.எம்., காசிப்பூர் |
ரூ.8 லட்சம் |
ஐ.ஐ.எம்., உதய்ப்பூர் |
ரூ.8 லட்சம் |
டி.ஏ.பி.எம்.ஐ., மணிப்பால் |
ரூ.9.90 லட்சம் |
எல்.ஐ.பி.ஏ., சென்னை |
ரூ.7.2 லட்சம் |
பிரதான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேரும் நடைமுறை
வணிகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது 2 அடுக்கு நடைமுறை கொண்டதாகும்.
குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நுழைவுத் தேர்வுகளில் எடுத்துள்ள மதிப்பெண்கள் பார்க்கப்படும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அடுத்த நிலைக்கு செல்வார்கள்.
இரண்டாம் நிலையில், குழு கலந்தாய்வு, நேர்முகத்தேர்வு மற்றும் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். அதேசமயம், சில வணிகப் பள்ளிகள், Group Exercise போன்ற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. இதற்கு உதாரணம், MICA - அகமதாபாத். இக்கல்வி நிறுவனம், ஒரு மாணவரின் குழு வேலைத் திறனை சோதிக்கிறது.
மேலும், பிரபல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஒருவரின் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. பணி அனுபவம் உள்ள ஒருவர், சேர்க்கை செயல்பாட்டில் கூடுதல் புள்ளிகளைப் பெறுகிறவராக இருக்கிறார். அதேசமயம், பணி அனுபவம் என்பது, 3 ஆண்டுகளுக்கும் மேலே சென்றால், பிரபல வணிகப் பள்ளிகளில் இடம்பெறும் செயல்பாட்டில் உங்களுக்கு பிரயோஜனம் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.