sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஸ்ரீஆதி சங்கரர் உபதேசத்தை பின்பற்றுங்கள்; சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி

/

ஸ்ரீஆதி சங்கரர் உபதேசத்தை பின்பற்றுங்கள்; சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி

ஸ்ரீஆதி சங்கரர் உபதேசத்தை பின்பற்றுங்கள்; சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி

ஸ்ரீஆதி சங்கரர் உபதேசத்தை பின்பற்றுங்கள்; சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி


மே 18, 2024 12:00 AM

மே 18, 2024 12:00 AM

Google News

மே 18, 2024 12:00 AM மே 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீஆதி சங்கரர் சித்தி அடைந்து 2,500 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அவரது உபதேசங்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் உள்ளது ஆச்சரியத்திற்குரியது!
இந்த உலகம் என்பது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அற்புத கருத்தை உள்ளடக்கிய 'வசுதேவ குடும்பகம்' குறித்து மகா உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது. இன்று உலகம் சிறப்பாக இயங்கவும், நிலைத்தன்மை பெறவும் நமது பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பூரணத்துவம் அடையாதவர்கள் தான் ஒருவரை எதிரியாகவும், மற்றொருவரை நண்பராகவும் கருதுவார். பூரணத்துவம் அடைந்தவர் இந்த உலகத்தை ஒன்றாக பார்ப்பார். உலகத்தில் அமைதி நிலவ மேம்பட்ட ஆன்மாவாக நாம் இருக்க வேண்டும். ஒருவரை எதிரியாகவும், ஒருவரை நண்பராகவும் கருதுவதால் தான் இந்த உலகில் சண்டைகள் நிகழ்கின்றன. இத்தகைய நிலை மாறி உலகத்தில் அமைதி நிலவ கல்வி மட்டும் போதாது; பழக்க வழக்கங்களும் நன்றாக இருப்பது அவசியம். குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் பருவத்தில் இருந்து சிறந்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
15 முதல் 35 வரையிலான வயதுடையவர்களை அதிகம் கொண்ட நம் நாட்டில், இளைஞர்கள் அனைவரும் சிறந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினார்களேயானால், 2047ம் ஆண்டில் நூறாவது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் உலக நாடுகளுக்கே முன்னோடியாக நம் பாரத தேசம் திகழும். உலகத்தின் நன்மைக்காக நமது இளைஞர்களை நாம் தயார்படுத்த வேண்டும். அதற்கு ஆதி சங்கரர் கூறிய சில முக்கிய கருத்துக்கள் நமக்கு நிச்சயம் பயன்படும்.
அடக்கம்:
இளமை, செல்வம், செல்வாக்கு, படிப்பு, பதவி, புகழ் உள்ளிட்ட எந்த ஒன்றாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. மூளையில் ஒரு சிறு கட்டி உருவாகி அனைத்தையும் மறந்தவர்கள் ஏராளம்; நஷ்டம் ஏற்பட்டு செல்வத்தை இழந்தவர்கள் பலர். ஆகவே, இந்த உலகில் எந்த ஒன்றும் நிரந்தரமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறப்புக்கு பின் எதையும் நாம் கொண்டு செல்ல முடியாது. நாம் செய்யும் பாவ, புண்ணியங்கள் தான் நம்முடன் வருகின்றன. பூரணத்தன்மையை அடைய அடக்கம் மிக அவசியம். கல்வி அடக்கத்தை கொடுக்கும். அடக்கத்தை கொடுக்காத கல்வி, கல்வியே அல்ல!
அளவான செல்வம்:
நமக்கு தேவையான அளவில் மட்டும் பணத்தை பெற்றிருந்தால் போதும். நமது தேவைக்கு ஏற்ப சேமிப்பும் அவசியம். ஆனால், தேவைக்கும் மேல் பணத்தில் அதிக ஆர்வம் கொள்ளக்கூடாது. நாட்டின் மேம்பாட்டில் சிவில், மெக்கானிக்கல், ஏரோஸ்பேஸ் போன்ற பல்வேறு இன்ஜினியரிங் துறைகளின் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகையால, எந்த ஒரு துறையை தேர்வு செய்து படித்த மாணவர்களாலும் சாதிக்க முடியும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மிஷின் லேர்னிங் போன்ற படிப்புகளை படித்தால் தான் அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கும் என்று கருதி பெரும்பாலான மாணவர்கள் அத்தகைய துறைகளை தேர்வு செய்கின்றனர்.
ஆனால், நீண்ட காலத்தில் பார்த்தோமேயானால், இதர துறைகளை படித்தவர்களும் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். நாணல் கொடி வேகமாக வளரும்; ஆனால், அதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. பனை மரம் மெதுவாகத்தான் வளரும்; ஆனால், பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். ஆகையால், இன்றைய மாணவர்கள் உடனடியாக கிடைக்கும் அதிக பணத்திற்கு ஆசைப்படாமல், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். பணத்திற்காக மட்டும் ஒரு வேலையை செய்யக் கூடாது. நமக்கு விருப்பமான வேலையை செய்ய வேண்டும். அது, சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனநிறைவு:
வேண்டாம் என்பதில் உள்ள ஒரு சுகம் வேறு எதிலும் கிடைக்காது. நம் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக்கொண்டு, தேவைக்கு அதிகமானதை வேண்டாம் என்று கூறும் எண்ணம் வேண்டும். இருப்பதைக் கொண்டு வாழ்வதில் மனநிறைவு அடைய வேண்டும். உலகமே ஒரு மாயை என்பதை உணர வேண்டும். இந்த மாயையில் இருந்தும், தீமையில் இருந்தும் விடபட பற்றின்மை என்பது வேண்டும். அதேதருணம், நாட்டின் மீது பற்று வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இளைஞர்கள் பயணிக்க வேண்டும்.
ஸ்ரீஆதி சங்கரர் அருளிய இத்தகைய நல்ல சிந்தினை 2,500 ஆண்டுகள் கடந்தும் நமக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது வியற்பிற்குரியது!






      Dinamalar
      Follow us