sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்தியாவில் வழங்கப்படும் கால்பந்து தொடர்பான படிப்புகள்

/

இந்தியாவில் வழங்கப்படும் கால்பந்து தொடர்பான படிப்புகள்

இந்தியாவில் வழங்கப்படும் கால்பந்து தொடர்பான படிப்புகள்

இந்தியாவில் வழங்கப்படும் கால்பந்து தொடர்பான படிப்புகள்


ஜூலை 12, 2014 12:00 AM

ஜூலை 12, 2014 12:00 AM

Google News

ஜூலை 12, 2014 12:00 AM ஜூலை 12, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகில இந்திய கால்பந்து பெடரேஷன் எனும் அமைப்பு, கால்பந்து விளையாட்டிற்கான, இந்தியாவிற்கான, தேசிய நிர்வாக அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பு கால்பந்து தொடர்பாக, படிப்புகளை வழங்குதல் மற்றும் பயிற்சியளித்தல் என்று என பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இளம் வீரர்களுக்கான பயிற்சி

இளநிலை பயிற்சிக்கும், சீனியர் நிலை பயிற்சிக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மிகவும் அடிப்படையான நிலையிலிருந்து பயிற்சி தொடங்குகிறது. ஒரு இளம் மாணவரின் கால்பந்து திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மதிப்பிடுவது மற்றும் அவர் எவ்வளவு நேரம், விளையாட்டுப் பயிற்சிக்காக ஒதுக்க முடியும் என்பது குறித்து, பயிற்சியாளரால் மதிப்பிடப்படுகிறது.

பயிற்சிகளின் பல்வேறு நிலைகள்

U-6 to U-10 (Under என்பதன் சுருக்கமே U)
U-12 / 13
U - 15 / 16
U - 19 / 20

ஒவ்வொரு பயிற்சி நிலையும், தனித்தனி நடைமுறைகளைக் கொண்டது மற்றும் ஒவ்வொரு மாணவரின் மேம்பாட்டின் மீதும் தனி அக்கறை செலுத்துவதாகும். இளம் வயதினருக்கான கால்பந்து பயிற்சி என்பது, போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவதல்ல. மாறாக, ஒரு மாணவரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்டது மற்றும் ஒருவர் தனது வயதுக்கேற்ற வளர்ச்சியை படிப்படியாக அடைந்து, ஒரு முழு நிபுணத்துவ கால்பந்து வீரராக வளர்வதை உறுதி செய்வதாகும்.

புகழ்பெற்ற(Elite) படிப்புகள்

உலக கால்பந்தின் நிர்வாக அமைப்பான FIFA, தனது உறுப்பு அமைப்புகள், சில சிறப்பு படிப்புகளை வழங்கும்படியான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவை,

இளைஞர் மேம்பாடு
அடிப்படை நிலைகள்(grass roots)
சீனியர் கிளப் நிலையிலான பயிற்சி
கோல் கீப்பிங்

அகில இந்திய கால்பந்து பெடரேஷன், FIFA அமைப்புடன் இணைந்து, தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ற வகையில், மேற்கண்ட நிலைகளில், படிப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற படிப்புகளை வழங்க, கீழ்கண்ட affiliated அமைப்புகள் வழங்க முடியும். அவை,

* அனைத்து மாநில அசோசியேஷன்கள்
* I - League Clubs (Premier & 2nd Division)
* தனியார் மற்றும் அரசு அகடமிகள்
* கால்பந்து பள்ளிகள்

நோக்கம்

AIFF அகடமிகளின் நோக்கம் என்னவெனில், தேசிய அணி மற்றும் கிளப்புகளுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி தருவதாகும். 12 முதல் 18 வயதிற்கு இடையிலான வீரர்களுக்கு, ஒரு வளமிக்க எதிர்காலத்தை உருவாக்கித் தருவதேயாகும். இதன்மூலம், அந்த மாணவர்கள் தேசிய அணிகளில், எதிர்காலத்தில் இடம்பெற முடியும்.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும், மொத்தம் 4 அகடமிகள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்.

அந்த 4 அகடமிகளின் விபரங்கள்

* மும்பை பிராந்திய அகடமி
   வயது வரம்பு - U-16 (boys born in 1997)
* கொல்கத்தா பிராந்திய அகடமி
   வயது வரம்பு - U-15 (boys born in 1998)
* கோவா பிராந்திய அகடமி
   வயது வரம்பு - U-13 (boys born in 2000)
* கோவா எலைட் அகடமி
   வயது வரம்பு - U-19 (boys born in 1995 - 96)

தேர்வு செய்யும் முறைகள்

12 முதல் 18 வயது வரையிலான வயது வரம்புக்கு, ஒவ்வொரு அகடமியும், 30 slot -களை வைத்துள்ளன. இந்த அகடமிகளுக்கான விளையாட்டு வீரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேசிய விழாக்கள்

வெவ்வேறான வயதினருக்கான தேசிய விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகினற்ன. இதன்பொருட்டு, ஒவ்வொரு மாநிலமும், தங்களுடைய அணியை அனுப்புகின்றன. இதில் பங்கேற்கும் வீரர்கள், ஒரு வாரம் தீவிரமாக ஆராயப்பட்டு, கடுமையான தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கைடு நெட்வொர்க்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ள கைடுகளின் மூலமாகவும், அகடமிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், அகடமிகளுக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மாதம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பிறகு நிரந்தர பயிற்சி பெறுபவராக(trainee) சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 

கோச்சிங் தொடர்பான படிப்புகள்

AIFF D-Licence Course
AFC C-Licence Course
AFC B-Licence Course
AFC A-Licence Course
AFC Pro-Licence Course
AFC Conditioning Course
AFC Goalkeeping Course
AFC Instructors Course
AFC Goalkeeping Instructors Course
AFC Conditioning Instructors Course

உள்ளிட்ட பல படிப்புகள் இதுதொடர்பாக வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர்வதற்கு, பல்வேறான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய கால்பந்து பெடரேஷன் வழங்கும் படிப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி மேலும் விரிவான முறையில் அறிந்துகொள்ள https://www.the-aiff.com/index.htm என்ற வலைதளம் செல்க.

இந்த அமைப்பு தவிர, இந்தியாவில், கால்பந்து தொடர்பாக பயிற்சியளிக்கும் பல தனியார் அமைப்புகள் ஏராளமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us