/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஜிமேட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள்
/
ஜிமேட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள்
அக் 19, 2013 12:00 AM
அக் 19, 2013 12:00 AM
த கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில்(ஜி.எம்.ஏ.சி) என்ற அமைப்பால், ஜிமேட் தேர்வு நிர்வகித்து நடத்தப்படுகிறது. இந்த கவுன்சில், உலகளாவிய அளவில், வணிகப் பள்ளிகளின் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு.
மேலாண்மைத் துறை மாணவர்கள் மற்றும் அதுசார்ந்த கல்வி நிறுவனங்களின் தேவைகளை நிறைவுசெய்வதே, இந்த அமைப்பின் நோக்கம். இன்றைய நிலையில், ஒரு ஆண்டுக்கு, 2 லட்சம் முறை எழுதப்படும் ஒன்றாக ஜிமேட் தேர்வு திகழ்கிறது. இதன்மூலம், மேலாண்மை படிப்பிற்கான சேர்க்கையில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்றாக இந்த தேர்வு மாறியுள்ளது.
இத்தேர்வின் மதிப்பெண்கள், சுமார் 110 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஜிமேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சுமார் 1,500க்கும் மேற்பட்ட பல்கலைகளில், 5,400க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர்க்கை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஜிமேட் தேர்வானது, நம்பத்தகுந்த ஒன்றாக, கல்வி நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது. மேலும், ஜிமேட் மதிப்பெண்கள் தொடர்பாக, GMAC அமைப்பு, validity studies நடத்துகிறது.
உலகம் முழுவதுமுள்ள பல்வேறான மையங்களில் GMAT தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆண்டிற்கு, அதிகபட்சம் 5 தடவைகள் இந்த தேர்வை ஒருவர் எழுதலாம். மேலும், ஒரு தேர்வு முடிந்து அடுத்தத் தேர்வை எழுதும் காலத்திற்கு, குறைந்தபட்சம் 31 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கவை.
ஜிமேட் தேர்வின் Quantitative மற்றும் Verbal ஆகிய பிரிவுகள், Computer adaptive testing முறையைப் பயன்படுத்துகின்றன. கேள்விகள், மாணவர்களின் பதிலளிக்கும் திறனை சோதிக்கும் வகையில் கேட்கப்படுகின்றன என்பதே இதன் பொருள். கேள்விகள், மிக எளிதாகவோ அல்லது மிக கடினமாகவோ இருக்காது. கேள்விகள், தனிப்பட்ட முறையில் வேறுபட்டாலும், காலஅளவு மற்றும் கேள்விகளின் எண்ணிக்கை ஆகியவை அனைவருக்கும் ஒரே அளவாகவே இருக்கும். மேலும், கேள்விகள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருப்பதால், மோசடி வேலைகள் பெருமளவு குறைந்துள்ளன.
தேர்வு
ஜிமேட் தேர்வில் 4 பிரிவுகள் உள்ளன. Analytical Writing Assessment, Integrated Reasoning, Quantitative and Verbal போன்றவையே அவை. இத்தேர்வில், கடந்த 2012ம் ஆண்டு, Integrated Reasoning என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய முறைகள் மற்றும் பலவித மூலங்களிலிருந்து தரப்படும் தரவுகளை மதிப்பிடும் ஆற்றல் ஒரு மாணவருக்கு இருக்கிறதா என்பதை சோதித்து அறியும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
குவான்டிடேடிவ்
தேர்வெழுதுவோர், arithmetic, elementary algebra and concepts of geometry ஆகிய துறைகளில் பெற்றுள்ள அறிவை சோதிப்பது இப்பகுதியின் நோக்கம். மேலும், இரண்டு வகையான குவான்டிடேடிவ் கேள்விகள் இப்பகுதியில் உள்ளன. Problem solving மற்றும் data sufficiency போன்றவையே அந்த இரு பிரிவுகள்.
Problem solving கேள்விகள், ஒருவரின் மதிப்பாய்வு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை சோதிக்கின்றன. அதேசமயம், Data sufficiency கேள்விகள், ஒரு குவான்டிடேடிவ் சிக்கலை, எவ்வாறு ஒருவர் பகுப்பாய்வு செய்கிறார் என்பதை மதிப்பிடுகிறது. மேலும், தொடர்புடைய டேட்டாவை அடையாளம் காண்பதில் உங்களின் திறன் மற்றும் சிக்கலை சரிசெய்யும் அளவிற்கு உங்களிடம் போதுமான தரவு இருக்கிறதா என்பதையும் இத்தகைய கேள்விகள் சோதிக்கின்றன.
வெர்பல்
எழுதப்பட்ட விஷயத்தை படித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல், விவாதங்களை மதிப்பிடல் மற்றும் எழுதப்பட்டவற்றை சரிபார்த்தல் போன்ற திறன்கள் இப்பகுதியில் சோதிக்கப்படுகின்றன. இப்பகுதியின் கேள்விகள், reading, comprehension, critical reasoning, sentence correction ஆகியவற்றிலிருந்து இடம்பெறும்.
இன்டக்ரேட்டட் ரீசனிங்
பலவிதமான மூலங்களிலிருந்து வரும் தரவுகளை வைத்து பணிபுரியும் ஆற்றல் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கவே, இந்த பகுதி, கடந்த 2012ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிரிவில், வெவ்வேறு வடிவங்களில், மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். Graphics interpretation, two part analysis, table analysis and multi-source reasoning போன்றவை அவற்றுள் சில.
Analytical Writing மதிப்பீடு
ஒரு விவாதத்தை பகுப்பாய்வு செய்யும் இப்பகுதியானது, 30 நிமிடங்கள் நீடிக்கும். இப்பிரிவில் ஒருவர், கொடுக்கப்பட்ட ஒரு விஷயத்தில் பொதிந்திருக்கும் அம்சத்தை பகுப்பாய்வு செய்வதோடு, அதைப் பற்றி எழுதவும் வேண்டும்.
Quantitative மற்றும் Verbal பிரிவுகள், Computer adaptive முறையிலானவை. இப்பிரிவுகளில், நீங்கள் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை, அதன் கடினத்தன்மை மற்றும் நீங்கள் பதிலளித்த கேள்விகள் இதர தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். நீங்கள் அதிக கேள்விகளுக்கு பதிலளித்தால், அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
மேற்கூறிய இரு பிரிவுகளைத் தவிர்த்து, Integrated Reasoning(IR) மற்றும் Analytical Writing Assessment(AWA) ஆகிய பிரிவுகளுக்கு, தனித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். IR மற்றும் AWA ஆகிய பிரிவுகளின் மீதான உங்களின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த ஜிமேட் மதிப்பெண்களோடு இணைக்கப்படாது.
இந்திய கல்வி நிறுவனங்களும், ஜிமேட் தேர்வும்
சுமார் 150க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கும், இந்தியாவின் 80க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஜிமேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. பிரத்யேகமாக, 5 மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 5 படிப்புகளுக்கு ஜிமேட் மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவை,
PGP; ISB, Hyderabad
PGPEX; IIM, Calcutta
PGPX; IIM, Ahmedabad
IPMX; IIM, Lucknow
EPGP; IIM, Bangalore
இவைதவிர, வேறு சில முக்கிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களும், ஜிமேட் மதிப்பெண்களின் மூலமாக, மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. அவை,
IIMs of Indore, Kozhikodu, Shillong, Udaipur, Ranchi, Trichy, Raipur
XLRI, Jamshedpur
SPJIMR, Mumbai
IMT of Ghaziabad, Hyderabad, Nagpur.
மேலும், இதுதொடர்பான முழு தகவல்களுக்கு www.mba.com/landingpages/india/study-in-india/gmat-accepting-schools.aspx என்ற இணையதளம் செல்க.
தேர்வுக்கு தயாராதல்
ஜிமேட் தேர்வுக்கு, அவசர கதியில் தயாராதல் தவறு. ஒருவேளை, உங்களின் நண்பர்களில் சிலர் இந்த தவறை செய்தாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேரவுள்ளீர்கள் என்பதை முடிவுசெய்து கொண்டு, அந்த கல்வி நிறுவனம், ஜிமேட் தேர்வின் எந்தப் பிரிவு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்துவைத்து, அதற்கேற்ப நமது தயாராதலை மேற்கொள்ள வேண்டும்.
மொத்த மதிப்பெண்கள் அல்லது perfect மதிப்பெண்கள் என்பதைப் பற்றி எந்த தீர்மானமும் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், வணிகப் பள்ளிகள், பொதுவாக, அவற்றுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, ஒரு சிறப்பான target -ஐ நிர்ணயம் செய்து, அதற்கேற்ப இயங்கவும்.
மாதிரித் தேர்வுகளை எழுதி, அதன்மூலம் நமது பலம் மற்றும் பலவீனங்களை அறியவும். ஜிமேட் தயாராதலுக்கான ஒரு விரிவான திட்டத்தை தயார்செய்து, அதற்கேற்ப தவறாமல் செயல்படவும். அதேசமயம், மிகவும் ஒரு கடினமாக மனோநிலையில் இருத்தல் நல்லதல்ல. ஏனெனில், நாம் படிப்பதை நாமே அனுபவித்துப் படித்தால்தான், நீண்டகாலப் பயனை நாம் அனுபவிக்க முடியும்.
ஜிமேட் தேர்வுமுறை
பிரிவு - காலஅளவு - கேள்வி எண்ணிக்கை - கேள்வி வகை - மதிப்பெண் நிலை(Score range)
Analytical writing assessment - 30 - 1 - Analysis of an argument - 0 to 6
Integrated Reasoning - 30 - 12 - Multi-Source Reasoning, Table analysis, Graphics interpretation, Two-part analysis - 1 to 8
விரும்பினால், 8 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்
Quantitative - 75 - 37 - Data Sufficiency, Problem solving - 0 to 60
விரும்பினால், 8 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்
Verbal - 75 - 41 - Reading comprehension, Critical reasoning, Sentence correction - 0 to 60.
ஒட்டுமொத்த காலஅளவு - 3.30 மணி நேரங்கள்.

