செப் 03, 2024 12:00 AM
செப் 03, 2024 12:00 AM

தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் தாயகமாக ஆஸ்திரேலியா உள்ளது.
நவீன உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைப்புகளுடன் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த மற்றும் அடிலெய்டு போன்ற நகரங்கள் உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களாக கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் குறைந்தது ஓர் ஆண்டிற்கு முன்பே திட்டமிடுவது நல்லது.
படிப்புகள்:
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் வணிகம், பொறியியல், சுகாதார அறிவியல், கலை மற்றும் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகளை வழங்குகின்றன.
பிரதான பல்கலைக்கழகங்கள்:
மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் போன்றவை சர்வதேச அளவில் சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மாணவர் விசா:
ஆஸ்திரேலியாவில் படிக்கும் காலத்திற்கு ஏற்ப மாணவர் விசா வழங்கப்படுகிறது. போதுமான நிதி ஆதாரம், சேர்க்கை கடிதம் மற்றும் ஆங்கில மொழி புலமை ஆகியவை அவசியம்.
கல்விக் கட்டணம்:
படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து கல்விக் கட்டணம் மாறுபடுகிறது. பொதுவாக, ஆண்டுக்கு 20,000 முதல் 45,000 வரையிலான ஆஸ்திரேலிய டாலர்கள் கல்விக் கட்டணமாக பெறுப்படுகிறது. நகரத்தைப் பொறுத்து, உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு 20,000 முதல் 30,000 வரையிலான ஆஸ்திரேலிய டாலர்கள் தேவைப்படலாம்.
உதவித்தொகை:
ஆஸ்திரேலிய அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. எனினும், இத்தகைய உதவித்தொகைகள் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள்:
மாணவர்கள் படிக்கும்போதே, பகுதி நேரமாக வேலை செய்ய முடியும். சர்வதேச மாணவர்கள் படிப்புக்கு பிறகு, அங்கேயே வேலை வாய்ப்பு பெறவும் சாத்தியக்கூறுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முதலில் பட்டியலிடுவது அவசியம். விண்ணப்பத்தை நேரடியாக பல்கலைக்கழகத்திலோ அல்லது அங்கீகரிக்கபட்ட கல்வி முகவர் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம். பதிவு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பல்கலைக்கழக இணையதளங்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்க்கலாம்.
விபரங்களுக்கு:
https://www.studyaustralia.gov.au/