தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஹார்வர்டில் படிக்க ஆசையா?

ஹார்வர்டில் படிக்க ஆசையா?

ஹார்வர்டில் படிக்க ஆசையா?


பிப் 17, 2016 12:00 AM

பிப் 17, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 17, 2016 12:00 AM பிப் 17, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது என்கிறீர்களா!

உங்களது ஆசையை நிறைவேற்றுவதன் முதல் படியாக, இங்கு வழங்கப்படும் பல்வேறு விதமான படிப்புகள் மற்றும் அவற்றின் சேர்க்கை முறை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...

ஹார்வர்டில் படிப்பதே பெருமை

அமெரிக்காவின்  பழமையான உயர்கல்வி நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் 1636ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின்கீழ், பல்வேறு படிப்புகளை வழங்கும் 12 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதுவரை 190 நாடுகளைச் சேர்ந்த 3.6 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து பட்டம் பெற்றுள்ளனர். அனைத்து உலக நாடுகளைச் சேர்ந்த, கோடிக்கணக்கான மாணவர்கள் இப்பல்கலையில் சேர்க்கை பெறுவதையும், படித்து, பட்டம் பெருவதையும் பெருமையாகவும், சாதனையாகவும் கருதுகின்றனர். அதனால் தான் ஹார்வர்டின் புகழ் எத்திசையும் ஒலிக்கிறது.

இளநிலை படிப்புகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் மானுடவியல், அறிவியல், சமூக அறிவியல், ‘ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் அப்ளைடு சயின்ஸ்’ (எஸ்.இ.ஏ.எஸ்.,) உள்ளிட்ட பிரத்யேக ஹார்வர்டு பட்டப் பள்ளிகளில் பல்வேறு துறைகளில் ஏராளமான இளநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, ‘சாட்’ ( ஸ்கூலஸ்டிக் அசஸ்மென்ட் டெஸ்ட்) அல்லது ‘ஏ.சி.டி.,’ (அமெரிக்கன் காலேஜ் டெஸ்ட் ) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

’டோபல்’ என்னும் ஆங்கில மொழிப் புலமைத் திறன் பரிசோதனை தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு: www.college.harvard.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us