அக் 09, 2015 12:00 AM
அக் 09, 2015 12:00 AM
உயர்கல்வி கற்பதற்கு ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்து வருகிறது. அளவான செலவும், ஏறத்தாழ இந்தியாவை ஒத்த வாழ்க்கை முறையும், உயர்ந்த கல்வித் தரமும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்!
நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த 40,000 மாணவர்கள் தங்களது உயர்கல்வியினை மலேசியாவில் பயின்று வருகின்றனர். உலகத் தரத்துக்கு இணையாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைந்து வரும் மலேசிய பல்கலைக்கழகங்களில், மேலாண்மை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் சட்டக் கல்வி போன்ற பட்டப் படிப்புகள் சர்வதேச மாணவர்களின் முதன்மை தேர்வாகவே உள்ளது.
தகுதி தேர்வு இல்லை
பெரும்பாலான மலேசியா பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், தங்களது உயர் கல்வியினை பயில சேட், டோபல் போன்ற தகுதி தேர்வுகளை எழுத வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை.
மேல்நிலை மற்றும் இளநிலை கல்வியில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மலேசியா பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி சேர்க்கைக்காக விண்ணப்பித்த மாணவர்களில் ஆங்கிலம் மொழி அல்லாத நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், ஆங்கில மொழி புலமை தேர்வு சில கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.
உதவித்தொகை
மலேசிய சர்வதேச உதவித்தொகை திட்டத்தின் கீழ், அந்நாட்டு அரசாங்கம் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு உதவித்தொகையை வழங்கிவருகிறது. அதுமட்டுமின்றி, மலேசியா காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் ஆதரவு ஊதியம் திட்டத்தின் மூலம் காமன்வெல்த் நாடுகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு முதுகலை பட்டப் படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்குகிறது.
மேலும், மலேசியாவில் இயங்கி வரும் பல்வேறு தனியார் வங்கிகளும் சர்வதேச மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கல்வி கடன் உதவியைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
சில முக்கிய பல்கலைக்கழகங்கள்
மலயா பல்கலைக்கழகம்
பிரபலமான படிப்புகள்: மானிடவியல், சமூகவியல், ஆங்கிலம்
ஆண்டு கட்டணம்: ரூ 1 லட்சம் முதல்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மலேசியா
பிரபலமான படிப்புகள்: தொழில்துறை கணிதம், கட்டுமான கட்டிடம்
ஆண்டு கட்டணம்: ரூ 1.5 லட்சம்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பிரபலமான படிப்புகள்: சட்டம் மற்றும் நிர்வாக அறிவியல்
ஆண்டு கட்டணம்: ரூ 1.07 லட்சம்
மல்டிமீடியா பல்கலைக்கழகம்
பிரபலமான படிப்புகள்: திரைப்பட கலை, மேலாண்மை, சட்டம்

