தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கருத்து வேறுபாடுகளை கையாள்வது எப்படி?

கருத்து வேறுபாடுகளை கையாள்வது எப்படி?

கருத்து வேறுபாடுகளை கையாள்வது எப்படி?


நவ 23, 2026 01:11 PM

நவ 23, 2026 01:11 PM

Follow on GoogleFavourite on Google

நவ 23, 2026 01:11 PM நவ 23, 2026 01:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி வகுப்பறையிலோ அல்லது விளையாட்டு மைதானத்திலோ நண்பர்களுடன் பேசும் போது எல்லாரும் ஒரே கருத்தை ஏற்றுக்கொள்வது இல்லை. கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது. மனிதர்கள் அனைவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

எனவே, மற்றொருவருடன் முரண்படுவது தவறல்ல. ஆனால், அந்த முரண்பாட்டை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் நம்முடைய பண்பு அடங்கியிருக்கிறது.

வித்தியாசம்


கருத்து மாறுபாட்டிற்கும் அடுத்தவரை அவமதிப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் விவாதங்களின் போது எதிரில் இருப்பவரின் கருத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த நபரையே தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசிவிடுகிறார்கள்.

ஒருவரின் கருத்தை நாம் ஏற்கவில்லை என்பதற்காக அவரைத் தரக்குறைவாகப் பேசுவதோ அல்லது சத்தம்போட்டு அடக்க நினைப்பதோ சரியான அணுகுமுறை அல்ல. நாம் விவாதிப்பது ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பற்றியே தவிர, எதிரே இருக்கும் சக மாணவரைப் பற்றி அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

நல்ல உரையாடலுக்கு முதல் தேவை பிறர் பேசுவதை பொறுமையுடன் கேட்பது தான். சக மாணவர் தனது கருத்தை சொல்லும் போது, இடையில் குறுக்கிடாமல் முழுமையாகக் கேட்க வேண்டும்.

அவர்கள் பேசும் போது முகத்தைப் பார்த்து கவனிப்பதும், அவர்கள் முடிக்கும் வரை காத்திருப்பதும் மரியாதையின் அடையாளம். எதிர்தரப்பினர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு பதில் அளிக்கும் போது, தேவையற்ற மனக்கசப்புகளும், வாக்குவாதங்களும் தவிர்க்கப்படுகின்றன.

"உனக்கு ஒண்ணுமே தெரியாது" அல்லது "இது ரொம்ப முட்டாள்தனமான யோசனை" என்று சொல்வதற்கு பதிலாக, "நீ சொல்வதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் எனக்கு இதில் வேறு ஒரு கருத்து இருக்கிறது" அல்லது "என் பார்வையில் இது இப்படித் தோன்றுகிறது" என்று மென்மையாக பேசப் பழக வேண்டும்.

அமைதி


விவாதங்களின் போது கோபம் வருவது இயல்பு தான். ஆனால், உடனடியாக அந்தக் கோபத்தை காட்டாமல், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யாராவது கோபமூட்டும் வகையில் பேசினால், சில நொடிகள் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us