sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தேர்வுக்கு தயாராவது எப்படி?

/

தேர்வுக்கு தயாராவது எப்படி?

தேர்வுக்கு தயாராவது எப்படி?

தேர்வுக்கு தயாராவது எப்படி?


நவ 27, 2024 12:00 AM

நவ 27, 2024 12:00 AM

Google News

நவ 27, 2024 12:00 AM நவ 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக வலைதளங்களை தவிருங்கள்

சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தையும், நண்பர்களுடன் 'சாட்' செய்யும் நேரத்தையும் நடைபயிற்சி, சைக்ளிங், ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளில் செலவிடலாம். அது மாணவர்களை மேலும் ஒருமித்த சிந்தனையுடன் படிக்க உதவும். படித்து முடித்தப்பின் நண்பர்களுடன் பேசிக் கொள்ளலாம். மேலும் தேர்வு முடியும் வரை கவனச் சிதறல் ஏற்படுத்தும் 'ஆப்'களை அலைபேசியிலிருந்து நீக்கி விடுவது சிறப்பு.

சுத்தம் பேணுதல்

படிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வெண்டும். படிக்கும் இடம் சுத்தமாக இருந்தால்தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். படிக்க உட்காரும் நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படுத்துக் கொண்டோ அல்லது ஓய்வு எடுக்கும் வகையில் சாய்வாக உட்கார்ந்து கொண்டோ படிக்கக் கூடாது. நிமிர்ந்து உட்கார்ந்து சரியான நிலையில் படிக்கும்போது கை கால் வலியின்றி கூடுதல் கவனத்துடன் படிக்க முடியும்.

படிக்கும் பொருட்கள்

படிக்க உட்காரும் பொழுது புத்தகத்துடன், பேனா, பென்சில், நோட், ஹைலைட்டர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட படிக்கத் தேவையான பொருட்களுடன் படிக்கத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் எடுக்க எழுந்து எழுந்து போகும் பொழுது அது படிப்பதற்கு இடையூறாகவும், படிப்பதில் உள்ள தொடர்ச்சியும் பாதிக்கப்படும். முழு கவனத்துடன் படிக்க முடியாது. ஆகவே எல்லாப் பொருட்களும் படிக்கும் இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிக்கும் பொழுது மொபைல் உள்ளிட்ட பொருட்களை அம்மாவிடம் கொடுத்து விட்டு படிக்க உட்காரலாம். இது போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும்.

மூச்சுப் பயிற்சி

மன அழுத்தம் ஏற்படும்பொழுது மூச்சுப் பயிற்சியை செய்யலாம். படிக்க உட்காருவதற்கு முன்பு மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவேண்டும். இவ்வாறு பொறுமையாக 5 முறை செய்துவிட்டு படிக்கும்போது முழுகவனத்துடனும், வேகமாகவும் படிக்க முடியும். குறிப்பிட்ட நேரம் படித்தவுடன் சோர்வாக உணரும்பொழுது சிறிது நேரம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அமைதியாக ஓய்வு எடுக்கலாம். இந்த ஓய்வு மேலும் சில மணி நேரங்கள் உற்சாகத்துடன் படிக்க உதவும்.

படிக்கும் சூழ்நிலை

அதிக சத்தம் இருக்கும் இடங்களில் படிப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் கவனச் சிதறல் ஏற்படும். தனி அறையிலோ, மொட்டை மாடியிலோ சத்தம் இல்லாத இடமாகவும், போதுமான வெளிச்சம் உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். வெளிச்சம் குறைவாக இடமாக இருந்தால் நமது மூளை அதை தூங்கும் நேரம் என்ற சமிஞையை கொடுத்துவிடும். இதனால் கவனத்துடன் படிப்பதற்கு பதிலாக தூக்கம் மட்டுமே வரும். பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். அந்த நேரத்தில் கடினமாக பாடங்களை படிக்கலாம். மதிய நேரத்தில் மூளையும் உடலும் சோர்வாக இருக்கும் அந்த நேரத்தில் எளிதான பாடத்தைப் படிக்கலாம். இதனால் மூன்று வேளையும் கவனத்துடன் படிக்க முடியும் . இவ்வாறு படிக்கும் சூழ்நிலையையும், நேரத்தையும் சரியாக தேர்வு செய்து கொள்வது முக்கியம்.

நேர்மறை எண்ணம்

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். என்ன ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்னும் பழமொழியை அனைவரும் அறிவோம். அதுபோல் நமது லட்சியத்தை மனதில் பதிய வைத்து படிக்க வேண்டும். அந்த எண்ணமே நம்மை உத்வேகத்துடன் படிக்க வைக்கும்.

நேர மேலாண்மை

படித்தலில் முக்கியமான பகுதி நேர மேலாண்மை. எந்த நேரத்தில் உற்சாகத்துடன் படிக்க முடியும் என்பது அவரவர் உடலியல் சம்பந்தப்பட்டது. சிலருக்கு காலையில் படித்தால் மனதில் பதியும், சிலருக்கு மாலை நேரம் ஏதுவாக இருக்கும். அவ்வாறான நேரத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 20-20 கிரிக்கெட் போல 20-20 படிக்கும் நேரம் என்று வகுத்துக் கொள்ளலாம். அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை சில நிமிடங்கள் ஓய்வு என பிரித்துக் கொள்ளலாம். இதனால் மூளை சோர்வடையாமல் இயங்கும்.

மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் நேரத்தை தங்கள் பெற்றோர்களிடம் சொல்லி வைக்கலாம். இதனால் மூளை சரியாக அந்த நேரத்தில் படிக்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொள்ளும். சரியான நேரத்தில் தூக்கம், உணவு, ஓய்வு என்று நேரத்தை வகைப்படுத்திக் கொண்டால் படிக்கும் பாடம் பாரமாக இருக்காது. எளிமையாக புரிந்து கொண்டு விரைவாக படிக்கவும் முடியும்.

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல், சிற்சில விஷயங்களை ஒழுங்குபடுத்தி படித்தாலே எளிதாக தேர்வில் ஜெயிக்கலாம்.






      Dinamalar
      Follow us