sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஐ.ஐ.எப்.டி.,யில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல!

/

ஐ.ஐ.எப்.டி.,யில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல!

ஐ.ஐ.எப்.டி.,யில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல!

ஐ.ஐ.எப்.டி.,யில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல!


பிப் 12, 2014 12:00 AM

பிப் 12, 2014 12:00 AM

Google News

பிப் 12, 2014 12:00 AM பிப் 12, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில்(..எப்.டி), எம்.பி..(சர்வதேச வணிகம்) படிப்பில் இடம் பிடிப்பதென்பது, இந்தியாவின் முக்கிய வணிகப் பள்ளிகளில் இடம் பிடிப்பதைவிட கடினம் என்று கூறப்படுகிறது.

IIFT நுழைவுத்தேர்வு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வை நீங்கள் எழுதியிருந்தால், அத்தேர்வுக்கான IIFT 2013 analysis and Answer Keys உள்ளிட்டவைகளை வைத்து, உங்களின் தேர்வு செயல்பாடு குறித்து, நேர்மையான ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அடுத்த சுற்று தேர்வு செயல்பாட்டிற்கு தயாராக வேண்டிய நேரமிது.

வளாகங்கள்

இக்கல்வி நிறுவனத்தின் வளாகங்கள், டில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ளன. அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் டில்லி வளாகத்திலும், அடுத்த நிலையில் உள்ளவர்கள் கொல்கத்தா வளாகத்திலும் சேர்க்கைப் பெறுவார்கள்.

IIFT சேர்க்கை தொடர்பாக ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் என்னவெனில், அக்கல்வி நிறுவனத்தின் இடங்கள், கட்டணம், கட்-ஆப், மதிப்பெண் வழங்கும் செயல்பாடு, தேர்வு செய்யும் செயல்பாடு மற்றும் மாற்ற விகிதாச்சாரம் போன்றவைதான்.

இடங்கள்

IIFT -ல் மொத்தம் 312 இடங்கள் உள்ளன. 2013 - 15ம் கல்வியாண்டில் 235 மாணவர்கள் டில்லி வளாகத்திற்கும், 77 மாணவர்கள் கொல்கத்தா வளாகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்டணம்

இக்கல்வி நிறுவனத்தில், MBA (IB) படிப்பில், 2013-15ம் ஆண்டு Academic year -க்கான ஓராண்டு கட்டணம் ரூ.6,37,500. அதேசமயம், 2014-16ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த இறுதி தகவல், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பப்படும் offer letters -ல் தெரிவிக்கப்படும்.

2013 கட்-ஆப்

2014ம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் 50+ மதிப்பெண்கள். கடந்த 2013ம் ஆண்டில் மொத்த மதிப்பெண் 100 -ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு pattern -ம் தொடர்புடையதாக இருப்பதால், கட்-ஆப் மதிப்பெண்ணும் ஏறக்குறைய அதேயளவிற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பகுதிவாரியான(sectional) கட்-ஆப் மதிப்பெண்ணும் உண்டு.

மதிப்பெண் வழங்கும் செயல்முறை

கடந்தாண்டின் மதிப்பெண் வழங்கும் செயல்முறையில் சில வேறுபட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால், negative marking திட்டம், சீரான ஒன்றாகும். அதாவது, ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் 3ல் 1 பங்கு. கீழ்கண்ட அட்டவணையில் அதுகுறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன.

AREA

MARS PER QUESTION

NUMBER OF QUESTIONS

Quantitative Ability

1

25

Data Interpretation

1

19

Verbal Ability

0.75

20

Reading Comprehension

0.75

16

Logical Reasoning

0.75

20

General Awareness

0.50

28

TOTAL

100

128

தேர்வுசெய்யும் நடைமுறை

கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர்கள் shortlist செய்யப்படுவார்கள். Shortlist செய்யப்பட்டவர்கள், ஒரு தெளிவான நோக்க அறிக்கை(statement of purpose) எழுத வேண்டும். அதன்மூலம், அவரின் திறன் மற்றும் தன்மை மற்றும் அவர் ஏன் MBA (IB) படிப்பை தேர்வு செய்தார் என்பது அறிந்துகொள்ளப்படும்.

Shortlist செய்யப்பட்டவர்கள், குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட படிகளை கடக்க வேண்டும். பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்தே தலைப்புகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக கூறவேண்டுமெனில், கடந்த 2013ம் ஆண்டில், கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி - வரமா, சாபமா?" என்றும், குழு கலந்தாய்வுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "ஒருவரை பணிக்கு அமர்த்துவோர், எதற்கு அதிக வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும்? அவரின் MBA பட்டத்திற்கா அல்லது தனிப்பட்ட திறனுக்கா?". இந்தப் பகுதியில், இதுபோன்ற கேள்விகளைத்தான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கட்டுரை எழுதும் பகுதிக்கு மொத்தம் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும். சராசரியான 300 வார்த்தைகளில் ஒருவர் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரைப் பகுதி முடிந்தவுடன், குழு கலந்தாய்வுப் பகுதி தொடங்கும்.

குழு கலந்தாய்வை நடத்துவதற்கு, IIFT, நல்ல அமைப்பாக்கப்பட்ட ஒரு வழிமுறையை கையாள்கிறது. ஒவ்வொருவருக்கும், தனது கருத்துக்களை சொல்ல தலா 2 நிமிடங்கள் வழங்கப்படும். குழு கலந்தாய்வின்போது, ஏதேனும் ஒருவர் நடுவராக செயலாற்றும்படி கேட்டுக் கொள்ளப்படலாம்.

கலந்துரையாடலின் முடிவில், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒட்டுமொத்த கலந்துரையாடலின் கருத்துக்களையும் சுருக்கி கூறும்படி கேட்டுக் கொள்ளப்படுவார். குழு கலந்தாய்வின் நேரம், குறைந்தபட்சம் 75 நிமிடம் முதல் அதிகபட்சம் 1 மணிநேரம் வரை இருக்கலாம்.

நோக்க அறிக்கையுடன் நீங்கள் சமர்ப்பிக்கும் படிவத்தின் அடிப்படையில்தான், உங்களின் நேர்முகத் தேர்வின் அம்சங்கள் அமைந்திருக்கும். அந்தப் படிவம் மற்றும் அறிக்கையின் படியே, பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான உத்தேச நேரம் 20 நிமிடங்கள்.

கடுமையான போட்டி

ஒவ்வொரு ஆண்டும், 312 இடங்களை நிரப்புவதற்கு, சுமார் 1,000 மாணவர்கள் shortlist செய்யப்படுகிறார்கள். கடந்தாண்டு, 975 மாணவர்கள் shortlist செய்யப்பட்டனர். இவற்றில் 235 இடங்கள் டில்லியிலும், 77 இடங்கள் கொல்கத்தாவிலும் உள்ளன. IIFT தேர்வை சுமார் 50,000 பேர் வரை எழுதுகின்றனர். இதன்மூலம், இக்கல்வி நிறுவனத்தில் இடம்பிடிக்க, எவ்வளவு போட்டிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வெயிட்டேஜ் விபரங்கள்

PARAMETER

WEIGHT

IIFT 2013 score

65%

Essay

10%

GD

10%

PI

15%

 






      Dinamalar
      Follow us