/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஐ.ஐ.எம்.,கள் தங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்யும் முறை
/
ஐ.ஐ.எம்.,கள் தங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்யும் முறை
ஐ.ஐ.எம்.,கள் தங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்யும் முறை
ஐ.ஐ.எம்.,கள் தங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்யும் முறை
ஜன 27, 2014 12:00 AM
ஜன 27, 2014 12:00 AM
கேட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தங்களின் மதிப்பெண் மற்றும் கட்-ஆப் ஆகியவற்றின் அடிப்படையில் ஐ.ஐ.எம்.,களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கான கட்டுரை இது.
குழு கலந்தாய்வு மற்றும் தனிநபர் நேர்முகத் தேர்வு மற்றும் எழுதும் திறன் தேர்வு(WAT - Written Ability Test) உள்ளிட்ட விஷயங்களை அடுத்த கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள 13 ஐ.ஐ.எம்.,களும், தங்களுக்கான மாணவர்களை எந்த வகையில் தேர்வு செய்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
கேட் என்பது இறுதியானதல்ல
கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், அதில் ஒருவர் எடுத்திருக்கும் மதிப்பெண் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்திற்கான குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்கட்ட தேர்வு நடைபெறுகிறது.
ஐ.ஐ.எம்., கொல்கத்தாவின் கட்-ஆப் விழுக்காடு மட்டும் 95%. அதேசமயம், மற்ற ஐ.ஐ.எம்.,களின் கட்-ஆப் விழுக்காடு 90% தான். கேட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றுவிட்டால் மட்டுமே, ஒருவருக்கு குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் திறன் தேர்வு ஆகியவற்றில் கலந்துகொள்ள அழைப்பு வந்துவிடும் என்று நினைத்துவிடல் கூடாது.
பெரும்பாலான ஐ.ஐ.எம்.,கள், முந்தைய அகடமிக் சாதனைகள், பணி அனுபவங்கள், பாலினம் மற்றும் அகடமிக் வேறுபாடுகள் உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
எந்தெந்த ஐ.ஐ.எம்., எப்படி?
ஐ.ஐ.எம்., அகமதாபாத்
10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் இளநிலைப் பட்டப் படிப்பு மதிப்பெண்கள் உள்ளிட்ட முந்தைய அகடமிக் சாதனைகள் கணக்கில் எடுக்கப்படுகின்றன.
ஐ.ஐ.எம்., பெங்களூர்
முந்தைய அகடமிக் சாதனைகள், பணி அனுபவங்கள் ஆகியவை பார்க்கப்படும். கேட் மதிப்பெண்களை சேர்த்து, 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள், பட்டப் படிப்பு மதிப்பெண்கள், பணி அனுபவம் அல்லது புரபஷனல் படிப்பு ஆகியவற்றுக்கு 70 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.
ஐ.ஐ.எம்., கொல்கத்தா
அகடமிக் சாதனைகளுடன், பாலின வேறுபாடு அம்சங்களும் கணக்கில் எடுக்கப்படும்.
ஐ.ஐ.எம்., லக்னோ
கேட் மதிப்பெண்கள், முந்தைய அகடமிக் சாதனைகள், பணி அனுபவம், பாலினம் மற்றும் படிப்பின் பிரிவு உள்ளிட்ட பல்வேறான அம்சங்கள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படும். மொத்த வெயிட்டேஜ் 50.
ஐ.ஐ.எம்., இந்தூர்
கேட் மதிப்பெண்கள் மற்றும் அகடமிக் சாதனைகள் ஆகியவை கணக்கில் எடுக்கப்படுகின்றன. பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்ட மதிப்பெண், ஒருவரின் 10, 12ம் வகுப்புகள் மற்றும் இளநிலைப் பட்ட படிப்பின் மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு
முந்தைய அகடமிக் சாதனைகள் மற்றும் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு மற்றும் WAT தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.ஐ.எம்., ஷில்லாங்
கேட் மதிப்பெண்களுடன், முந்தைய அகடமிக் சாதனைகளும் கணக்கில் எடுக்கப்படும்.
ஐ.ஐ.எம்., ரோடாக்
கேட் மதிப்பெண்கள், முந்தைய அகடமிக் சாதனைகள், பாலினம் மற்றும் படிப்பின் பிரிவு உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படும். மேலும், மகளிர் மற்றும் பொறியியல் அல்லாத மாணவர்களுக்கு 30 சலுகை மதிப்பெண்களும் வழங்கப்படும்.
ஐ.ஐ.எம்., ராஞ்சி, திருச்சி, உதய்ப்பூர் மற்றும் காஷிப்பூர்
மேற்கண்ட புதிய ஐ.ஐ.எம்.,களில், நேர்முகத் தேர்வு மற்றும் WAT தேர்வுக்கான நபர்களை தேர்வு செய்ய, கேட் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது.
இறுதி தேர்வுசெய்யும்(final selection) செயல்பாடு
WAT தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், தேர்வு செய்தலின் இறுதிநிலை நடைபெறுகிறது. முன்பு, குழு கலந்துரையாடல் பிரதான அம்சமாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக WAT வந்துள்ளது அல்லது குழு கலந்தாய்வுடன் அது இணைக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மற்றும் லக்னோ ஐ.ஐ.எம்.,கள் நேர்முகத் தேர்வுடன், குழு கலந்தாய்வு மற்றும் WAT தேர்வு ஆகிய இரண்டையும் நடத்துகின்றன. ராஞ்சி, ரோடாக், ராய்ப்பூர், திருச்சி, உதய்ப்பூர் மற்றும் காஷிப்பூர் ஆகிய இடங்களிலுள்ள புதிய ஐ.ஐ.எம்.,கள், பொதுவான சேர்க்கை செயல்பாட்டை(Common Admission Process) நடத்துகின்றன. இதன்மூலம், பொது WAT மற்றும் நேர்முகத் தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
புதிய ஐ.ஐ.எம்.,கள் தங்களின் தேர்வுப் பட்டியலை தனியாக வெளியிடும். கடந்த 2012ம் ஆண்டு, முதல் சுற்று CAP, ஐ.ஐ.எம்., ரோடாக்கால் நடத்தப்பட்டது. அதையடுத்து, ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் அதை நடத்தியது. இந்த ஆண்டு அதை ஐ.ஐ.எம்., திருச்சி நடத்தும். இறுதி சேர்க்கை செயல்பாட்டிற்கென, ஐ.ஐ.எம்.,கள் தனி அளவீடுகளை வைத்துள்ளன.
ஐ.ஐ.எம்., அகமதாபாத்
WAT - PI மதிப்பெண்களுக்கு 70% வெயிட்டேஜும், அகடமிக் சாதனைகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மதிப்பெண்ணுக்கு 30% வெயிட்டேஜும் வழங்கப்படுகின்றன. இறுதி தேர்வு செய்தல் செயல்பாட்டில், WAT, நேர்முகத் தேர்வு, விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள், அகடமிக் செயல்பாடுகள், சிறப்பான சாதனைகள், திறன்சார் நடவடிக்கைகள், பணி அனுபவம் மற்றும் முதுநிலைப் படிப்பு ஆகிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.
ஐ.ஐ.எம்., பெங்களூர்
இறுதி தேர்வுசெய்தல் செயல்பாட்டிற்கு பிறகு, content மதிப்பெண் (7.5), note style மதிப்பெண் (7.5) மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் (20) போன்றவை கணக்கில் கொள்ளப்படும்.
ஐ.ஐ.எம்., கொல்கத்தா
கேட் மதிப்பெண்கள், WAT, நேர்முகத் தேர்வு மற்றும் பழைய அகடமிக் சாதனைகள்(இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள்) போன்றவை பார்க்கப்படும்.
ஐ.ஐ.எம்., லக்னோ
குழு கலந்தாய்வு, WAT தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியஅம்சங்கள் மட்டுமே, இறுதி தேர்வு செய்தல் செயல்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றுக்கான ஒட்டுமொத்த வெயிட்டேஜ் 50.
ஐ.ஐ.எம்., இந்தூர்
நேர்முகத் தேர்வு மற்றும் வாட் தேர்வுகளில் ஒருவரின் செயல்பாடு மற்றும் முந்தைய அகடமிக் சாதனைகள் ஆகியவை எடுக்கப்படும்.
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு
கேட் தேர்வு மதிப்பெண்கள், WAT, குழு கலந்தாய்வு, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு, பாலினம் மற்றும் படிப்பின் பிரிவு ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
ஐ.ஐ.எம்., ராஞ்சி
அகடமிக் விபரங்கள், பணி அனுபவம், படிப்பின் பிரிவு மற்றும் பாலினம் உள்ளிட்டவை, இறுதி தேர்வுசெய்தல் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ரோடாக், ராய்ப்பூர், திருச்சி, உதய்ப்பூர் மற்றும் காஷிப்பூர் ஆகிய இடங்களின் ஐ.ஐ.எம்.,கள்
கேட் தேர்வு, நேர்முகத் தேர்வு, WAT, முந்தைய அகடமிக் செயல்பாடுகள் மற்றும் பணி அனுபவம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
படிப்பு வேறுபாடுகள்
வெறுமனே பொறியியல் பட்டதாரிகளே ஐ.ஐ.எம்.,களில் குவிந்து கிடப்பதை தடுக்கவும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் சேரவும், தங்களின் சேர்க்கை செயல்பாட்டில், கடந்த சில ஆண்டுகளாகவே பல ஐ.ஐ.எம்.,கள் மாற்றம் செய்துள்ளன.
நாட்டிலுள்ள ஐ.ஐ.எம்.,களில் சுமார் 90% மற்றும் அதற்கும் மேலாக, பொறியியல் பட்டதாரிகளே, மாணவர்களாக இருக்கிறார்கள். மேலும், அவற்றில் பெரும்பாலானோர் ஆண்கள்.
எனவே, பொறியியல் சாராத இதர துறைகளின் பட்டதாரிகளை அதிகளவு சேர்க்கவும், குறிப்பிட்ட அளவில் பெண்களை சேர்க்கவும், ஐ.ஐ.எம்.,கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. வரும் 2014 - 16ம் கல்வியாண்டில், ஐ.ஐ.எம்., அகமதாபாத், கலை, வணிகம், அறிவியல், மருத்துவம், பொறியியல் மற்றும் இதர துறைகளைச் சார்ந்த, தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களை WAT மற்றும் நேர்முகத் தேர்வு சுற்றுக்கு நேரடியாக அனுமதிக்கிறது.
ஐ.ஐ.எம்., லக்னோ, தனது மாணவர் சேர்க்கை செயல்பாட்டில், பொறியியல் சாராத பட்டதாரிகளுக்கு 3 கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறது. பொறியியல் சாராத பட்டதாரிகளை அதிகளவில் சேர்க்க, கோழிக்கோடு மற்றும் இதர 6 புதிய ஐ.ஐ.எம்.,களும் பல சிறப்பு சலுகைத் திட்டங்களைக் கொண்டுள்ளன.
பல ஐ.ஐ.எம்.,கள் குறிப்பிட்ட அளவில் பெண்களை சேர்க்க முயற்சி மேற்கொண்டதால், முந்தைய ஆண்டுகளைவிட, தற்போது பெண்களின் எண்ணிக்கை சற்று கூடியுள்ளது. ஐ.ஐ.எம்., கோழிக்கோடு, தனது முதுநிலைப் படிப்பில் 50%க்கும் அதிகமான பெண்களை சேர்த்து, முதன்முதலில் சாதனை படைத்துள்ளது. அக்கல்வி நிறுவனத்தின் 17வது batch -ல், சேர்க்கப்பட்ட 361 மாணவர்களில் 196 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஐ.எம்., பெங்களூரிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முந்தைய எண்ணிக்கை 100ஐ தாண்டி, 108ஆக உயர்ந்துள்ளது. ஐ.ஐ.எம்., லக்னோவில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை 150% அதிகரித்துள்ளது. ஐ.ஐ.எம்., கொல்கத்தாவிலும் பெண்களின் எண்ணிக்கை 11% என்பதிலிருந்து 23% என்பதாக அதிகரித்துள்ளது.
இதேபோன்ற நிலைதான் ஐ.ஐ.எம்., இந்தூரிலும். தனது 2011 - 13ம் ஆண்டிற்கான சேர்க்கையில் ஒரு மாணவி கூட இல்லாத நிலையிலிருந்த ஐ.ஐ.எம்., ராஞ்சியில், 2012ம் ஆண்டு சேர்க்கையின்போது 42 மாணவிகள் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

