தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவீர்களா ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,?

அறிவீர்களா ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,?

அறிவீர்களா ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,?


ஜூன் 19, 2017 12:00 AM

ஜூன் 19, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 19, 2017 12:00 AM ஜூன் 19, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், தரமான கல்வியை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் எவை? என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில்  ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச்’ கல்வி நிறுவனம் முக்கியத்துவம் பெறுகிறது!

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி கல்வி நிறுவனமாக, பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., செயல்பட்டு வருகிறது. இங்கு, விஞ்ஞான ஆராய்ச்சிகளில் மாணவர்களின் படைப்பு சிந்தனை திறன்களை ஊக்குவிக்கும் வகையிலான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மேலும், அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் மேம்பட அதிநவீன தொழில்நுட்ப அய்வுக் கூடங்கள், நூலகங்கள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல்கள் நிறைந்திருப்பது, இந்த கல்வி நிறுவனங்களின் சிறப்பம்சம்.

படிப்புகள்
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், புவி அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட துறைகளில், பி.எஸ் - எம்.எஸ்., (இரட்டை பட்டப்படிப்பு), எம்.எஸ்., பிஎச்.டி., மற்றும் ஒருங்கினைந்த பிஎச்.டி., மற்றும் போஸ்டு டாக்டோரல் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை மற்றும் தகுதிகள்
பி.எஸ் - எம்.எஸ்.,

10 செமஸ்டர்கள் கொண்ட இந்த படிப்பில், முதல் இரண்டு ஆண்டில், அறிவியல் பாடப்பிரிவில் உள்ள அடிப்படை அறிவியல் நுணுக்கங்கள் கற்று தரப்படும். மூன்று மற்றும் நான்காம் ஆண்டில், அறிவியல் துறையில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை படிப்பாக தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். ஐந்தாம் ஆண்டு முழுவதும் முழுநேர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

அடிப்படைத் தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் கே.வி.பி.ஒய்., என்ற தேசிய அறிவியல் உதவித்தொகை தகுதி தேர்வில் தேர்ச்சி, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மதிப்பெண், மத்திய அல்லது மாநில கல்வி வாரியத்தின் கீழ் பயின்று பிளஸ் 2 தேர்வில்  95.2  ’கட் - ஆப்’ மதிப்பெண் ஆகிய மூன்று பிரிவுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆப்டிடியூட் டெஸ்ட்-ல் தேர்ச்சி பெறுவது அவசியம்.

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி
உயிரியல், வேதியியல், புவியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் எம்எஸ்., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., அல்லது பிஎச்.டி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.பி.பி.எஸ்., அல்லது அதற்கு இணையான  இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

பதிவு செய்ய: www.iiseradmission.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us