தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/செமி கண்டக்டர் துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

செமி கண்டக்டர் துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

செமி கண்டக்டர் துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்


மார் 31, 2026 12:30 PM

மார் 31, 2026 12:30 PM

Follow on GoogleFavourite on Google

மார் 31, 2026 12:30 PM மார் 31, 2026 12:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போது, உலகம் கணினி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில், 'குவான்டம் கம்ப்யூட்டிங்' உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் உலகத்தை மாற்றும். எனவே, மாணவர்கள் அதற்கு ஏற்றார் போல திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.

வெறும், 'ஜாவா' தெரிந்தால் வேலை கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டது. தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்முறைகளை புரிந்து கொள்வது அவசியம்.

பிளஸ் 2 தேர்வு முடிவின் போது, யூடியூப், டெலிகிராம், இன்ஸ்டகிராம் போன்ற தளங்களின் வழியே, எளிதில் வேலை கிடைக்கும் படிப்புகள் என்ற தவறான தகவல்களை பிரபலங்கள் பரப்புவர். அவற்றை கண்டு மாணவர்கள் ஏமாற வேண்டாம். கல்லுாரியில் சேருவதற்கு முன், நேரில் ஆய்வு செய்வது அவசியம்.

'டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, சின்தெடிக் டேட்டா, செமி கண்டக்டர்' போன்ற துறைகள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், மாணவர்களிடம் அதற்கு தகுந்த திறன் இல்லாததால், வேலை வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது.

எதிர்காலத்தில் மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக, 'செமி கண்டக்டர்' துறை உள்ளது.

மொபைல் போன், லேப்டாப், கார்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும், 'சிப்' முக்கிய அங்கமாக இருப்பதால், 'செமி கண்டக்டர்' துறையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த துறையில் வேலை பெற, வெறும் கணினி அறிவு மட்டும் போதாது. மாறாக, 'சிப் டிசைன், சிப் பேப்ரிக்கேஷன், சிப் பேக்கேஜிங்' உள்ளிட்ட சிறப்பு திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை, தற்போது பல்வேறு துறைகளில் மனிதவள தேவை குறைய முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலை, நீங்கள் படித்து முடிக்கும் காலங்களில் உருவாகாமல் இருக்க, ஏ.ஐ.,யை வெறும் கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், அது எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், அத்துறையில் ஏ.ஐ., பயன்பாடு குறித்து, கற்றுக்கொண்டால் வேலை உறுதி. நடப்பாண்டு, 'நீட்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட சற்று அதிகரிக்கும். வெற்றி பெற முடியாதவர்கள், அதற்கு இணையான அடுத்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.

- கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us