sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

விமானப் படை பணி எப்படிப்பட்டது?

/

விமானப் படை பணி எப்படிப்பட்டது?

விமானப் படை பணி எப்படிப்பட்டது?

விமானப் படை பணி எப்படிப்பட்டது?


ஆக 25, 2014 12:00 AM

ஆக 25, 2014 12:00 AM

Google News

ஆக 25, 2014 12:00 AM ஆக 25, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

"ஒரு ராணுவ வீரனாக இருப்பது, தைரியமாக இருப்பதைவிட கூடுதலானது. உங்களைவிட உயர்ந்த ஒன்றுக்காக, உங்களையே தியாகம் செய்வதாகும் அந்தப் பணி" என்ற ஒரு பொன்மொழி உண்டு.

இந்திய விமானப் படையில் சேர்வதென்பது, ஒருவரின் தலைமைத்துவ மற்றும் மேலாண்மை திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் எளிதாக சமாளிக்கும் மனோதிடம் ஏற்படுகிறது.

குழுப் பணி, தகவல்தொடர்பு திறன்கள் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்தல், வியூகரீதியிலான மற்றும் பன்முக சிந்தனையை கூர்மையாக்குதல் ஆகியவை தொடர்பாக கொடுக்கப்படும் பயிற்சி, நெருக்கடிகளை, சாந்தமாக எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்தும். இத்தகைய பயிற்சிகள், ஒரு விமானப் படை அதிகாரிக்கு வழங்கப்படுகின்றன.

ஒரு இளம் மாணவனையோ அல்லது மாணவியையோ, வெறுமனே ஒரு முதிர்ச்சியடைந்த ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மட்டுமே விமானப்படை பயிற்சி, மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை தலைமைத்துவப் பண்பு உள்ளவர்களாக உருவாக்கும் வகையில் அதன் பயிற்சிகள் அமைகின்றன.

ஒரு அதிகாரியின வலுவான மனப்பாங்கு மற்றும் உறுதியான நேர்மறை மனோதிடம் ஆகியவை, கூட்டத்தினர் மத்தியில், அவரை தனித்து உயர்த்திக் காட்டும்.

இந்திய விமானப்படையின் பிரிவுகள்

பறத்தல் பிரிவு
போர் விமானங்கள்(fighters)
போக்குவரத்து
ஹெலிகாப்டர்கள்
தொழில்நுட்ப பிரிவு
மெக்கானிக்கல்
எலக்ட்ரானிக்ஸ்
வேறு பிரிவுகள்
நிர்வாகம்
அக்கவுன்ட்ஸ்
சரக்குப் போக்குவரத்து
கல்வி
வானிலை

தேவைப்படும் திறன்கள்

பல்வேறான வாழ்க்கைச் சூழல்களுக்கு ஏற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல்
தைரியம்
தியாக மனப்பான்மை
நல்ல உடல்வலிமை
உறுதியான இலக்கு
தலைமைத்துவ திறன்கள்
சுயசார்பு
சமூக நோக்கு
சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு
விரைவான முடிவுகளை எடுக்கும் ஆற்றல்
சிறிய தொந்தரவுகளால் பாதிக்கப்படாத தன்மை மற்றும் நேரக் கட்டுப்பாட்டை கடைபிடித்தல்
விழிப்புணர்வு மற்றும் தேவையான அறிவோடு இருத்தல்

எங்கே படிக்கலாம்?

புனேவின் காடாக்வஸ்லாவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகடமி(NDA) ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இக்கல்வி நிறுவனம், பல திறன்வாய்ந்த ராணுவ நிபுணர்களையும், விண்வெளி வீரர்களையும், வீரதீர செயல்கள் மற்றும் தங்களின் சிறப்புவாய்ந்த சேவைக்காக விருதுபெற்ற நபர்களையும் அதிகளவில் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே, பயிற்சி பாடத்திட்டம், மொத்தம் 3 ஆண்டு காலஅளவைக் கொண்டது. அந்த பயிற்சி நடவடிக்கைகள், பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளன.

* உடல்ரீதியிலான பயிற்சி பாடங்கள்
* பணி தொடர்பான பாடங்கள்
* அகடமிக்ஸ்

ஒரு ஆண்டு காலத்திற்கு, பயிற்சி மாணவர்கள், விமானப்படை அகடமிக்கு பறத்தல் பயிற்சி பெற செல்ல வேண்டும். இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தால், பறத்தல் பிரிவில்(flying branch), நிரந்தர கமிஷன் அதிகாரி என்ற பதவியைப் பெறலாம்.

விமானப்படை அகடமி செய்வது என்ன?

இந்த அகடமி, பறத்தல், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் இதர நிர்வாகப் பணிகளில் பயிற்சிகள் அளிப்பதோடு, தரைப்படை மற்றும் கப்பற் படையினைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பறக்கும் பயிற்சியினையும் வழங்குகிறது.

ஒரு விமானப் படை அதிகாரியாக இருப்பதற்கு தேவைப்படும் மன ஆற்றலையும், உறுதியையும் பெறும் வகையில், இந்த அகடமி உங்களை தயார்படுத்துகிறது. ஒரு அதிகாரியாக இருப்பதற்கு தேவைப்படும் திறன்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றுக்கும் அப்பால், அந்த அதிகாரிக்கு இருக்க வேண்டிய நன்னடத்தை மற்றும் பண்பு நலன்களையும் இந்த அகடமி கற்றுத் தருகிறது.

இவைதவிர, புராஜெக்ட்டுகள், கேஸ் ஸ்டடீஸ், பணியிலிருக்கும்போதே பயிற்சி, பிரசன்டேசன்கள், விவாதங்கள், புத்தக மதிப்பாய்வுகள், கெஸ்ட் லெக்சர்கள், பொது மேடைப்பேச்சு, விளையாட்டு, நீச்சல், ஆயுதப் பயிற்சி, யோகா, கள சாதன பயிற்சி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான பயிற்சியும் பாடத்திட்டத்தில் உண்டு.

விமானப்படை தொழில்நுட்பக் கல்லூரி

விமானப்படை அகடமியில் வழங்கப்படும் 22 வார பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், பொறியியல் அதிகாரிகளுக்கான அடுத்த 52 வார பயிற்சிகள், பெங்களூரிலுள்ள விமானப்படை தொழில்நுட்பக் கல்லூரியில் வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சி, தலா 24 வாரங்கள் கொண்ட, பருவ இடைவெளிகளும் கொண்ட, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இப்பயிற்சி, எலக்ட்ரானிக் மற்றும் propulsion ஆய்வகங்களில் பணியாற்றுதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் மற்றும் இதர முக்கிய மையங்களுக்கு சென்று வருதல் உள்ளிட்டவற்றுக்கான பயிற்சி போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும்.

விமானப் படை நிர்வாக கல்லூரி

தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்த இக்கல்லூரி, விமானப்படை சார்ந்த பழமையான கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை ஆகியவற்றில் பணியிலிருக்கும் அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளின் அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சியளிப்பதற்காகவே, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

பணியிலிருக்கும் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் வேறுபல படிப்புகள்

Officers (BASCO)
Intermediate Air Staff Course: Officers (ISCO)
Basic Professional Knowledge Course: Officers (BPKC)
Advances Professional Knowledge Course: Officers (APKC)
Para Legal Course

போன்றவை.

மேற்கண்ட படிப்புகள் தவிர, பருவநிலை தொடர்பான படிப்புகளை வழங்குவதிலும் இக்கல்லூரி பெயர்பெற்று திகழ்கிறது. அவை,

Initial Forecasters&' Course (IFC)
Advanced Met Courses for Met Tradesmen (SNCOs)
2nd Stage Training of GDOC (Met)

பணி நிலைகள்

இந்திய விமானப்படையில் ஒரு அதிகாரி என்ற முறையில், உங்களின் வாழ்க்கை சவால்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்ததாகவும், அதேசமயம் வெகுமதிகளைக் கொண்டதாகவும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இத்துறையில், நீங்கள் வளர்ந்துவரும்போதே பல சிறப்பு வாய்ப்புகளையும் பெறுவீர்கள். இந்தியா அல்லது வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சிகள், மேலும் படிப்பதற்கான வாய்ப்புகள், வெளிநாடுகளில், இந்தியா சார்பில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமர்த்தப்படுதல் உள்ளிட்டவைகளே அந்த வாய்ப்புகள்.

வருமானம் மற்றும் நன்மைகள்

கடன் உதவிகள்

AFGIS உறுப்பினராக இருக்கும் ஒருவர், கீழ்கண்ட கடன் உதவிகளைப் பெறலாம். அவை,

* வீடு கட்டுவதற்கான கடன்
* கணினி கடன்
* போக்குவரத்து செலவினங்களுக்கான கடன்

மருத்துவ வசதி

வாழ்க்கை முழுவதற்கும், அதிகாரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும். குழந்தைகள், வளர்ந்து சுயசார்புக்கு வரும் வரை, அவர்களுக்கு அந்த சலுகை அளிக்கப்படும்.

காப்பீடு

மாதாந்திர பங்களிப்புத் தொகை மிகவும் குறைவானது மற்றும் அனைத்து எதிர்கால சாத்தியங்களையும் உள்ளடக்கியதாய், காப்பீட்டுக் கொள்கை அமைந்துள்ளது.

ஒரு விமானப் படை அதிகாரி என்ற முறையில், நீங்கள், ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு சலுகைப் பெறுவீர்கள். அதேசமயம், பைலட்டுகளுக்கென்று, ரூ.3.5 லட்சம் கூடுதலாக காப்பீடு இருக்கும்.

இதர நன்மைகள்

தங்குமிடம்
வருடாந்திர விடுப்பு 60 நாட்களும், casual விடுப்பு 20 நாட்களும், ஒரு ஆண்டுக்கு கிடைக்கும்.
விடுப்பு பயண சலுகைகள்
ரேஷன் பொருட்கள்
நிறுவன மற்றும் உணவக உறுப்பினர் சலுகை
பள்ளி வசதிகள்
ரயில் பயண சலுகைகள்
பாதுகாப்பான முகாம் வாழ்க்கை
CSD வசதிகள்
பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள்

பணி ஓய்விற்கு பிறகான சலுகைகள்

பென்ஷன்

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஒரு குடும்பத்தின் தேவைகளை கவனித்துக்கொள்ளும் வகையில், கவுரவமான பென்ஷன் தொகை வழங்கப்படும்.

காப்பீடு

பென்ஷன் பெருகின்ற அனைத்து விமானப் படை ஊழியர்களுக்கும் காப்பீடு உண்டு. 72 வயதுவரை உண்டு.

மருத்துவம்

ஓய்வுபெற்ற அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, சிறப்பான முறையில் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்குரிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, லைப்டைம் மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக பணியிலிருந்து விலகியவர்களுக்கான commercial venture -க்கும் அனுமதி உண்டு.

வாய்ப்புகள்

ராணுவத் துறையில், நாட்டிற்கு சேவை செய்தல் என்பது, மிகவும் கவுரவம் வாய்ந்த, மிகவும் மதிக்கத்தக்க, மிகவும் தைரியம் வாய்ந்த மற்றும் திருப்தியளிக்கும் பணியாகும். ஒரு ராணுவ அதிகாரி என்பவர், கட்டுக்கோப்பான சிறப்புத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒருவர், தேவையான தகுதிகள் மற்றும் மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால், இந்தப் பணி ஒரு தனிநபருக்கு, மிகவும் பொருத்தமான பணியாகும். சவால்கள், ஆபத்துக்கள் நிறைந்த இந்தப் பணியில், நமக்கு கிடைக்கும் வெகுமதிகள் மற்றும் பாராட்டுக்கள் மிக அதிகம். எனவே, விமானப்படையில் சேரும் ஆர்வம் இருந்தால், அதை நோக்கிய பயணத்தை இப்போதே துவக்குங்கள்.






      Dinamalar
      Follow us