தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சட்டத்துறை உங்களுக்கு பொருத்தமான ஒன்றா?

சட்டத்துறை உங்களுக்கு பொருத்தமான ஒன்றா?

சட்டத்துறை உங்களுக்கு பொருத்தமான ஒன்றா?


ஆக 29, 2013 12:00 AM

ஆக 29, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 29, 2013 12:00 AM ஆக 29, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவாதம், பகுப்பாய்வு மற்றும் நீதிமன்ற நடைமுறை செயல்பாடுகள் ஆகிய விஷயங்களில் ஒருவருக்கு ஆர்வமிருந்தால், அவருக்கு சட்டத்துறையே பொருத்தமான எதிர்கால துறையாகும். இதுவொரு, அங்கீகாரம் அளிக்கக்கூடிய மற்றும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய துறையாகும். ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால், அது பிரதமரின் உத்தரவாக இருந்தாலும்கூட, அதை நீதிமன்றத்தின் மூலமாக எதிர்க்க முடியும். இதுபோன்ற ஒரு வலிமையை சட்ட அறிவே நமக்குத் தருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள், நிஜ சட்ட உலகைப் பற்றி அறிந்துகொள்ள, என்.ஜி.ஓ., விசாரணை நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் இதர சட்ட அமைப்புகளில், கட்டாய இன்டர்ன்ஷிப் மூலமாக பயிற்சி பெறுகிறார்கள். சிக்கலான சட்ட வழக்குகளைக் கையாள, அதிக பொறுமையும், நிறைய பகுப்பாய்வு திறன்களும் இத்தொழிலுக்குத் தேவைப்படுகின்றன.

இத்துறையில் நுழைவது எப்படி?

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒருவர், அது எந்த பிரிவாக இருந்தாலும் சரி, பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பி.ஏ., எல்.எல்.பி., படிப்பை தேர்வு செய்யலாம். சேர்க்கைப் பெற வேண்டுமெனில், 14 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் பொது சட்ட நுழைவுத்தேர்வை(CLAT) எழுத வேண்டும். LSAT தேர்வு, அமெரிக்காவின் LSAC -ஆல் வடிவமைக்கப்பட்டது. இத்தேர்வை, இந்தியாவில், ஐ.ஐ.டி., காரக்பூர், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல், யு.பி.இ.எஸ் மற்றும் இதர 60 சட்டக் கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

புனே மற்றும் நொய்டாவில் அமைந்த சிம்பயோசிஸ் சட்டப் பள்ளியில் சேர்க்கைப் பெற, சிம்பயோசிஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், இதர மாநில நுழைவுத்தேர்வுகளும் உள்ளன. பொதுவாக, இந்த வகை நுழைவுத்தேர்வுகள், ஒரு மாணவரின் ஆங்கிலத்திறன், சட்டத்திறன், பொது விழிப்புணர்வு மற்றும் பகுப்பாய்வுத் திறன் ஆகிவற்றை சோதிக்கின்றன.

B.Sc. LLB (H), B.Com LLB (H), BBA LLB (H) போன்ற படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். Integrated படிப்புகள், ஆழ்ந்த சட்ட அறிவுடன், அறிவியல், வணிகம் மற்றும் வியாபார நடைமுறைகள் குறித்த நடைமுறை கொள்கை அறிவையும் தருகின்றன. BBA LLB (H) படிப்பு, கல்கோஷியா பல்கலை, ஐ.டி.எம்., பல்கலை, ஐ.பி., பல்கலை ஆகியவற்றிலும், B.Sc. LLB (H) படிப்பு, எஸ்.ஓ.ஏ., பல்கலையிலும், கே.ஐ.ஐ.டி., பல்கலையிலும், B.Com LLB (H) படிப்பு, அமைட்டி சட்டப் பள்ளி மற்றும் குஜராத் தேசிய சட்டப் பள்ளியிலும் கற்பிக்கப்படுகின்றன.

இவற்றுக்கான செலவு எவ்வளவு?

பிரபல தேசியளவிலான சட்டக் கல்லூரிகளில், கல்விக் கட்டணம் மிக அதிகம். 5 ஆண்டுகள் படிப்பிற்கு, ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை வசூலிக்கப்படும். புனேவிலுள்ள சிம்பயோசிஸ் சட்டப் பள்ளி, அமைட்டி கல்வி நிறுவனம் மற்றும் நிர்மா பல்கலை ஆகியவற்றில், மொத்த கல்வி கட்டணம் ரூ.4 - 6 லட்சங்கள் வரை வசூலிக்கப்படும்.

விடுதி செலவினங்கள், கல்வி கட்டணத்திற்குள் சேராது. அதேசமயம், ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில், ஐந்தாண்டுகளுக்கான கல்விக் கட்டணம், அதிகளவாக, ரூ.25 வரை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல் வகுப்புகள்

சட்டக் கல்வியை போதிப்பதில், கல்லூரிகள் பல்வேறான அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. கேஸ் அனலிசிஸ், பிரசன்டேஷன் மற்றும் ப்ராஜெக்ட் அசைன்மென்டுகளுக்கான நீதிமன்ற விவாத பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அணுகுமுறைகள் அமைகின்றன.

ஒரு வழக்கை பகுப்பாய்வு செய்யும்போது, உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு மாணவர் பகுப்பாய்வு செய்வதோடு மட்டுமன்றி, அந்த வழக்கில் எது தவறவிடப்பட்டது என்பதையும் அறிவது அவசியம். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் மாணவர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

புகழ்பெற்ற சட்டப் பள்ளிகள், வெறும் வகுப்பறை கல்வியில் மட்டும் அக்கறை செலுத்துவதில்லை. அங்கே படிக்கும் மாணவர்கள் பலர், நீதிமன்ற விவாதங்களிலும் பங்கேற்கிறார்கள். ஒரு மாதிரி விவாத நீதிமன்ற சூழலை அமைத்து, வழக்கறிஞர்களாக, பலவித வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்து, வாதம் புரிந்து, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதன்மூலம் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்ற பயிற்சி கிடைக்கிறது.

இதுபோன்று பயிற்சி பெறும் மாணவர்கள், இதர மாணவர்களைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். ரெஸ்யூம் நிலையிலும், அவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது.

கார்பரேட் பணி வாய்ப்புகள்

தேசிய சட்டப் பள்ளிகள் படித்து வெளிவரும் பெரும்பாலான மாணவர்கள், கார்பரேட் நிறுவனங்களின் சட்ட அமைப்புகளில் பணிக்கு சேர்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், பலர் கடன்பெற்று, அதிக செலவுசெய்து தங்களின் சட்டப் படிப்பை புகழ்பெற்ற சட்டப் பள்ளிகளில் முடித்திருப்பார்கள்.

அந்த நிலையில், கார்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதன் மூலமே, அவர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடிகிறது என்ற பரவலான கருத்து நிலவுகிறது. ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணிக்கு சேரும் ஒரு திறமையான சட்டக் கல்வி பட்டதாரி, ஆண்டிற்கு ரூ.12-13 லட்சங்கள் வரை சம்பளம் பெறுகிறார். ஒரு நல்ல பணி சூழலும் அவர்களுக்கு வாய்க்கிறது.

அதேசமயம், கார்பரேட் நிறுவனங்களில் பணிக்கு சேராமல், வேறு நீதிமன்ற பணிகளுக்கு செல்லும், வாத - பிரதிவாத அறிவைப் பெற்றுள்ள ஒருவர், மாதம் ரூ.10 - 20 ஆயிரங்கள் வரையே சம்பாதிக்கிறார். அவர், கீழ் நீதிமன்றங்களில் தனது பயிற்சியைத் தொடங்கி, அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் மேல்நிலை நீதிமன்றங்களுக்கு முன்னேறி செல்கிறார்.

Specialised tribunals, Lower regulatory authorities like IPR and Competition commission of India போன்றவை தொடங்கப்பட்ட பிறகு, பணி வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்துவிட்டன. சட்டப் பட்டதாரிகள், நிர்வாகப் பணிகளிலும் பணிபுரிய முடியும். Amarchand & Mangaldas & Suresh A Shroff & Co, AZB & Partners, Trilegal போன்ற நிறுவனங்கள், தங்களின் நிர்வாகப் பணிகளில் சட்டப் பட்டதாரிகளை பணியமர்த்துகின்றன.

எதை எங்கு படிப்பது?

LLM பட்டம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதால், இப்படிப்பை மேற்கொள்ள வெளிநாடு செல்வது நல்லது மற்றும் அங்கே இது ஏற்கனவே வழக்கத்திலுள்ளது. மேலும், 3 முதல் 4 ஆண்டுகள் வரையிலான காலஅளவுள்ள வெளிநாட்டுப் பட்டப் படிப்புகளை இந்திய பார் கவுன்சில் அங்கீகரிப்பதில்லை என்பதால், இளநிலைப் பட்டப்படிப்பை இந்தியாவில் மேற்கொள்வதே நல்லது.

பாடத்திட்டம்

Legal methods, Criminal law, family law, jurisprudence, interpretation of statutory law, advanced constitutional history, international commercial arbitration and criminal law, outer space law, labour law, company law, competition law, security law, environmental law, cyber law and intellectual property rights போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன.

படிப்புகள்

B.A - LLB, B.Sc. LLB (H), B.Com LLB (H), BBA LLB (H).

தகுதிகள்

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வுகள்

CLAT, LSAT, Symbiosis entrance test (SET), State entrances

பணி நிலைகள்

Lawyer, Advocate, Solicitor, Legal advisors

சிறந்த கல்லூரிகள்

National law school of India university, Bangalore, National law institute university, Bhopal, ILS law college, Pune, NUJS, Kolkatta, Amity law school, Delhi, Gujarat national law university.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us