அக் 09, 2024 12:00 AM
அக் 09, 2024 12:00 AM

நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அறிவியல் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற எழுதவேண்டிய தேர்வு, 'ஜாம்' எனும் 'ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட்'!
படிப்புகள்:
எம்.எஸ்சி.,
எம்.எஸ்சி.,- தொழில்நுட்பம்
எம்.எஸ்., - ஆராய்ச்சி
எம்.எஸ்சி., - எம்.டெக்., இரட்டை பட்டப்படிப்பு
ஜாயிண்ட் எம்.எஸ்சி., - பிஎச்.டி.
எம்.எஸ்சி., - பிஎச்.டி., இரட்டை பட்டப்படிப்பு
கல்வி நிறுவனங்கள்:
2025-26ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள 22 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-களில் வழங்கப்படும் 89 முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 3,000 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது.
மேலும், ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., டி.ஐ.ஏ.டி., ஐ.ஐ.இ.எஸ்.டி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,-புனே மற்றும் போபால், ஐ.ஐ.பி.இ., ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்., எஸ்.எல்.ஐ.இ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களும் ஜாம் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தகுதி:
2025ம் ஆண்டில் உரிய துறைகளில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்கள், இத்தேர்வு எழுதலாம். வயது வரம்பு இல்லை.
தேர்வு தாள்கள்:
பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், ஜியோலஜி, மேத்மேடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ் ஆகிய ஏழு பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு மையங்கள்:
இந்தியா முழுவதும் சுமார் 100 நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
சேர்க்கை முறை:
தேர்வில் பாடம்வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேசிய அளவிலான தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.
தேர்வு நாள்:
பிப்ரவரி 2, 2025
விபரங்களுக்கு:
https://jam2025.iitd.ac.in/